IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவில் சோனி பிரேவியா 4K ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

புதிய சோனி பிரேவியா 4K ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரேவியா X800H மற்றும் பிரேவியா X7500H ஆகிய மாடல்கள் ஆகும். இதில் X800H மாடல் 85 இன்ச் விலை ரூ.5,99,990 எனவும், 65 இன்ச் ரூ.1,39,990 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் X7500H மாடல் 55 இன்ச் மாடல் விலை ரூ.79,990 எனவும், 43 இன்ச் மாடல் விலை ரூ.61,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 49 இன்ச் மாடல் விலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

சோனி பிரேவியா X800H டிவி மற்றும் பிரேவியா X7500H டிவியின் சிறப்பம்சங்களாக டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ், சோனி எக்ஸ்1 4K ஹெச்.டி.ஆர் இமேஜ் பிராசசர், எக்ஸ் பேலன்ஸ்டு ஸ்பீக்கர் சிஸ்டம், ஸ்லிம் பெசல்ஸ், கூகுள் அசிஸ்டென்ட், வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி போர்ட், ஹெச்.டி.ஆர் 10 , 10 வாட் ஸ்பீக்கர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

சோனி நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலம் இவ்விரு டிவி மாடல்களையும் வாங்க முடியும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader