மாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்! தேர்தல் ஆணையம் உத்தரவு

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சோனு சூட். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான அருந்ததி படத்தின் மூலம் மிகவும் வில்லனாக பிரபலமான இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடையே ரியல் ஹீரோவாக வலம் வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் மொகா மாவட்டத்தில் பிறந்த இவர், நாடு முழுவதும் கொரோனா பொது முடக்கத்தின் போது நாட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல தனது சொந்த செலவில் வாகனங்கள் மற்றும் உணவு உட்பட பல்வேறு உதவிகளை ஏற்பாடு செய்து அவர்களை பத்திரமாக மீட்டு வைத்தவர் நடிகர் சோனு சூட்.

இந்த கொரோனா காலத்தில் அவர் செய்த பல்வேறு உதவிகள், அவருக்கு நாடு முழுவதும் பெரும் புகழைத் தேடித்தந்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூக தொண்டு ஆற்றி மக்களின் பாராட்டு மழையில் நனைந்தார்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்வை பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என அம்மாநில தேர்தல் தலைமை அதிகாரி கருணா ராஜு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார். இதனை முன்னிட்டு பஞ்சாப் மாநில சின்னமாக சோனு சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஒப்புதலையும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More