IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

CSK அணி ரசிகர்களுக்காக சொனாட்டாவின் சிஎஸ்கே 2020 சிறப்பு கடிகாரங்கள் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

சொனாட்டா பிராண்ட் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்காக சிறப்பு கடிகாரங்களை, “சிஎஸ்கே 2020 பதிப்பு” என்ற பெயரில் அறிமுகம் செய்து வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே வண்ணங்கள் மற்றும் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கடிகாரங்கள் அனலாக், டிஜிட்டல் மற்றும் அனா-டிஜி என இரண்டும் கலந்த செயல்பாடுகள் என பல வகைகளில் கிடைக்கும்.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தையும், தங்களுக்குப் பிடித்த வீரர்கள் களத்தில் இறங்கி விளையாடுவதை ரசிப்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், ‘ஒருமுறை ரசிகர், எப்போதும் ரசிகர்’ (‘Once a fan, Always a fan’) என்ற உணர்வைக் கொண்டாடும் விதமாக கடிகாரங்களின் தொகுப்பை அறிமுகம் செய்து சொனாட்டா நிறுவனம் ஒரு மிகப் பெரிய ரசனையை ஏற்படுத்தி தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

டைட்டன் கம்பெனி சென்னை சூப்பர் கிங்ஸ்சுடன், அதன் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாட்டின் இரண்டவது பதிப்பாக அதன் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் கைக்கடிகார பிராண்டான சொனாட்டா ‘சி எஸ் கே 2020’ என்ற சிறப்பு கடிகாரத் தொகுப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த பிரத்யேகமான கடிகாரத் தொகுப்பு ‘விசில்போடு படை’யின் (‘whistlepodu army’) அன்பைக் கொண்டாடுவதுடன் ரசிகர்களுக்காக பிரத்யேகமான கடிகாரங்கள் மற்றும் நவீனத் தன்மையுடன் கூடியதான ஸ்மார்ட் அணிதல் வகைகளை வழங்குகிறது.

Intellectual Property Protection | Trade Marks

சொனாட்டா – சிஎஸ்கே கூட்டணியில், இந்த ஐபிஎல் 2020 தொடரின் போது சிஎஸ்கே ரசிகர்களின் உணர்ச்சிகரமான பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க சொனாட்டா பிராண்ட் விரும்புகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்புக் கடிகாரத் தொகுப்பில் கம்பீரமான, துடிப்பான வடிவமைப்புகள் மற்றும் சிஎஸ்கே வண்ணங்களைக் கொண்ட கடிகாரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை மைதான உணர்வுத் தன்மை எனப்படும் ஸ்டேடியம் ஃபேஷனுக்கான சிறந்த துணையாக இருக்கும் என்பதோடு தாயகத்திலிருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு சிறந்த துணைத் தன்மையை வழங்கும்.

இது தொடர்பாகப் பேசிய, டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் சொனாட்டா தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் திரு. சுபிஷ் சுதாகரன் கூறுகையில், “அனைத்து ஐபிஎல் அணிகளும் உணர்ச்சிகரமான ரசிகர்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாட்டிலும் மற்றும் நாடு முழுவதும் மிகப் பெரிய ரசிகர் படையைக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் எங்கள் முதல் கடிகாரத் தொகுப்புக்கு நாடு முழுவதும் இருந்து ஒரு பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஏனெனில் கிரிக்கெட் மீதான அன்புக்கு எல்லைகள் எதுவும் இல்லை. தற்போது இந்த ஆண்டு சொனாட்டா சிஎஸ்கே 2020 பதிப்பில், நாங்கள் புதிய வகைக் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது மட்டுமல்லாமல், கிரிக்கெட் விளையாட்டு, அணி மற்றும் ‘ஒரு முறை ரசிகரானால், எப்போதுமே ரசிகர்’ என்ற உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான வழியையும் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளோம்.” என்றார்,

சொனாட்டா – சிஎஸ்கே 2.0 தொகுப்பில் அனைத்தும் புதிய தன்மை கொண்ட டிஜிட்டல், அனா-டிஜி என இரண்டும் சேர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளன, அத்துடன் சொனாட்டா ‘ஸ்ட்ரைடு ப்ரோ’ என்ற கலப்புத் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரமும் இந்தத் தொகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஃபிட்னஸ் டிராக்கர் எனப்படும் கட்டுடல் கண்காணிப்பு அமைப்பு, கால் அலெர்ட்ஸ் எனப்படும் அழைப்புகள் குறித்த அறிவிப்புத் தகவல்கள், செடண்டரி ரிமைண்டர் எனப்படும் நகர்தலுக்கான நினைவூட்டல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அலாரம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்தத் தொகுப்பு முதன்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கடிகாரங்களையும் கொண்டுள்ளது. இதனால் அனைத்து சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரசிகர்களுக்குமான ஒரு கடிகாரமாக இது அமைந்துள்ளது. இந்தத் தொகுப்பில் 10 வகை கடிகாரங்கள் உள்ளன. அவை https://www.sonatawatches.in/shop/cskin என்ற இணையதளத்தின் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலை வரம்பு ரூ. 499 முதல் ரூ. 3,495 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொனாட்டா, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிகப் பெரிய கைக்கடிகார பிராண்ட் ஆகும். இது டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தைச் சார்ந்தது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பளித்து தற்கால வடிவமைப்புகளை சிறப்பாக வழங்கி வருவதன் மூலமாக இது ஒரு தனி பிராண்ட் ஆக நிலை பெற்றுள்ளது. இந்த சொனாட்டா பிராண்ட் கடிகாரங்கள் ஆண்டுக்கு சுமார் 55 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. இவை நாடு முழுவதும் உள்ள வலுவான சுமார் 6 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களின் (டீலர்) கட்டமைப்பு மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கடிகாரமும் டாடா நிறுவனத்தின் உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும் விவரங்களுக்கு www.sonatawatches.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

About Sonata:

Sonata is India’s largest selling watch brand, from Titan Company Ltd., a TATA group company. It has established itself as a brand of great quality and unbeatable value for the customer. The brand has an annual sales volume of over 5.5 million watches and is sold through a strong retail network of over 6,000 dealers across the country. Every watch purchased comes with the TATA guarantee.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader