IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மகன் திருமணத்துக்கு மறுத்ததால் எஸ்.ஐ. தற்கொலை

29

ஊரெங்கும் அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்த பிறகு திருமணத்திற்கு மகன் மறுத்ததால் மனமுடைந்த போலீஸ் எஸ்ஐ தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் இருதயராஜ் (59). ஓய்வுப்பெற்ற உதவி ஆய்வாளரான இவருக்கு வியகுலமாரி என்ற மனைவியும், பால் மேத்யூ (27). என்ற மகனும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பால் மேத்யூவிற்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் 11ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்துவந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று பால் மாத்யூ தனது தந்தையிடம் சென்று தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்றும், திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இருதயராஜ், எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு, திருமணம் வேண்டாம் என்றால் அசிங்கமாக இருக்காதா, உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? என்று கேட்டுள்ளனர். இதனால் தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இருதயராஜ் படுக்கை அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகன் திருமணத்திற்கு மறுத்ததால் தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.