IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தாயை கொலை செய்த கொடூரன்!

Get real time updates directly on you device, subscribe now.

மதுபோதையில் இருந்த மகன் பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாலைப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் . இவர் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி ஜெயா. இவர் வீட்டிலேயே நெசவு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு பாலாஜி (வயது 30), கண்ணன் (வயது 23) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களுடைய 2-வது மகன் கண்ணன். இவர் மது, கஞ்சா என போதைக்கு அடிமையாக இருந்தார். இதனால் இவருடைய தாயார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார். மறுவாழ்வு மையத்தில் இருந்து வெளியே வந்தும், போதைக்கு அடிமையாகவே இருந்துள்ளார்.

மீண்டும் கண்ணன் போதைக்கு அடிமையாவதை நினைத்து தாய் மிகவும் மன உடைந்துள்ளார். கண்ணனை மீட்டும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க தாயார் நினைத்துள்ளார். அதற்காக கண்ணனை அழைத்துள்ளார்.

கண்ணன் மீண்டும் தான் வரப்போவது இல்லை என வாக்குவாதம் செய்துள்ளார். தாய் மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் இருந்த சுத்தியை எடுத்து தாயை பலமாக தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே தாய் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


மேலும் கொலையாளியான கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகனே தாயை கொன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More