23.1 C
Munich
Tuesday, August 9, 2022

இயற்கைக்கு மாறாக சோமாலியாவை பஞ்சம் சுழற்றி அடிக்க காரணம் என்ன?

Must read

சோமாலியா நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டை சுற்றி எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதிகள் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பீச் சோமாலியா நாட்டில் தான் அமைந்துள்ளது.

சோமாலியாவில் கற்காலத்திலேயே டோவியான் மற்றும் ஆர்கேசியான் எனும் நாகரிகங்கள் இருந்துள்ளது. அங்கேயே மனிதர்கள் வாழ்ந்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

சோமாலியாவில் சலேலோ எனும் பகுதி உள்ளது. அந்த பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே இடுகாடுகள் இருந்துள்ளதாக ஆதாரங்களை தோண்டி எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அன்றைய பொழுதிலேயே நகர்ப்புற வாழ்க்கை இருந்துள்ளதாம்.

வடக்கு சோமாலியாவில் நாசிக்கில் எனும் பகுதி இருந்திருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மை செய்ததற்கும் மாடு மேய்த்தற்கும் ஆதாரம் கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி அதனை பெயிண்டிங்கும் வரைந்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்து பலநாடுகளுக்கு வர்ததகமும் செய்துள்ளனர்.

1900ம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலி சோமாலியாவின் கடலோர பகுதிகளில் உள்ளே நுழைந்து அடித்து சோமாலியாவை இரண்டாக பிரித்து கொண்டனர். பிரித்து கொண்டதுடன் இத்தாலி சோமாலியா நிலம், பிரிட்டிஷ் சோமாலியா நிலம் என பெயர் வைத்துவிட்டு ஆட்சி புரிய ஆரம்பித்துவிட்டனர்.

அதன்பிறகு தான் சோமாலியாவில் பிரச்சனை எழ தொடங்கியது.

இரண்டு சோமாலியா வேண்டாம். நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என சோமாலியா மக்கள் குரல் எழுப்பி பல பிரச்சனைகள் மற்றும் கலவரங்கள் அனைத்தையும் தாண்டி ஜுலை1 ம் தேதி 1960ம் ஆண்டு சோமாலியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

அதன்பிறகு தான் சுதந்திரம் பெற்ற சோமாலியாவாக தனித்து துவங்க ஆரம்பித்தது.

1960ம் ஆண்டுக்கு பிறகு சோமாலியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு ஹாஜி பஷுர் இஸ்மாயில் என்பவர் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு நிறைய விதிமுறைகளை கொண்டு வந்தார்.

1966ல் சோமாலியாவில் ராணுவ ஆட்சி வந்தபிறகு எத்தியோப்பியாவில் இருக்கும் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி சோமாலியா கோரிக்கை வைக்கின்றனர். எத்தியோப்பியா எதிர்த்து நின்று சண்டை போடுகின்றனர். அதன்பிறகு தான் சோமாலியாவின் தலை எழுத்து மாறியது.

எத்தியோப்பியாவின் பகுதிகளை சோமாலியாவிற்கு தர முடியாது என கூறியபிறகு 1977ம் ஆண்டு சோமாலியா எத்தியோப்பியாவுடன் போர் வைத்து கொள்வதாக சோமாலியா கூறியது. அதற்கு சிறிதும் தயங்காத எத்தியோப்பியா எதிர்த்து நின்று சண்டை போட்டது.

சோமாலியாவும் எத்தியோப்பியாவும் சண்டை போடும் போது அவர்களுக்கு போதிய ஆயுதங்கள் இல்லாததால் சண்டை அப்படியே நின்றது. இதை அறிந்து கொண்ட அமெரிக்கா சோமாலியாவிற்கு உதவி புரிவதாக கூறி சண்டையில் அமெரிக்கா களமிறங்கியது.

அமெரிக்கா களமிறங்கிய பிறகு எத்தியோப்பியாவிற்கு தான் உதவி புரிவதாக கூறி ரஷ்யாவும் களமிறங்கியது. அமெரிக்காவும் ரஷ்யாவும் தன்னோட ஆயுத பலத்தை உலகிற்கு காண்பிக்க சோமாலியா எத்தியோப்பியா இரண்டு குட்டி நாடுகளையும் காலி செய்துவிட்டது.

சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அமெரிக்கா, நாங்கள் சோமாலியாவிற்கு உதவி புரிவதை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் எனக்கூறி சோமாலியாவை அப்படியே விட்டுவிடுகின்றனர்.

இதனால் ஆயுதம் மற்றும் வீரர்கள் பலம் இல்லாததால் உள்நாட்டுக்குள்ளே கலவரங்கள் வெடிக்க ஆரம்பிக்கிறது. இதிலிருந்து ஒவ்வொரு குருப்பாக தீவிரவாதம் உருவாகி அவர்களுக்குள்ளே ஒருத்தரை ஒருவர் அழித்துக் கொண்டனர். அதன்பிறகு பஞ்சம் தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிட்டது.

உள்நாட்டில் நடைபெறும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில் இயற்கையும் சோமாலியாவிற்கு எதிராக திரும்பியது.

அதாவது மழை இல்லாமல், இயற்கை வளங்கள் இல்லாமல் சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய உணவு கூட கிடைக்காமல் பஞ்சம் தலைவிரித்து ஆட ஆரம்பிக்கிறது. தற்போது இந்த நிலைமை எப்போது மாறும் என்று இறைவனுக்கு தான் தெரியும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article