IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எப்ப பார்த்தாலும் செல்போன்! அம்மா கண்டித்ததால் தற்கொலை செய்த மகள்!

18

இளம்பெண் ஒருவர் செல்போனில் முழ்கி இருந்ததால் அவருடைய தாய் கண்டித்துள்ளார். அதனால் அந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


புதுச்சேரி மணபேட்டை கன்னிக்கோவில் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி. அருகில் இருக்கும் அரிசி ஆலையில் வேலை பார்க்கிறார். இவர்களது மகள் சுமித்ரா (வயது 20). பி.ஏ. படித்து முடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.


தினமும் வீட்டில் எந்த வேலையும் பார்க்காமல் செல்போனிலேயே மூழ்கி இருந்துள்ளார். இதனால் தாய் சுமதி, இளம்பெண் சுமித்ராவை கண்டித்து கொண்டே இருப்பாராம். வீட்டில் ஒரு வேலையும் பார்ப்பது இல்லை; எப்போதும் செல்போனை நோண்டிக் கொண்டே இருப்பது சரியில்லை என்று அடிக்கடி கூறியுள்ளார். ஆனால் சுமித்ரா தன் தாய் சொல்வதை கேட்காமல் தொடர்ந்து செல்போனில் மூழ்கியிருந்தார்.


க்ளாஸ்ரூமில் தூக்கு மாட்டிய பிளஸ்1 மாணவி

சம்பவத்தன்று சுமதி உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளார். கிளம்பும் முன் வழக்கபோல் செல்போனுக்காக மகளைத் திட்டியிருக்கிறார். இதனால் சுமித்ரா மனமுடைந்தார். தினமும் இப்படி தாய் நம்மைத் திட்டுகிறாரே என வருந்தினார். வீட்டில் தனியாக இருந்த அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அப்போது வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டுகாரர் ஒருவர், சுமித்ரா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தூக்கில் இருந்து சுமித்ராவை கீழே இறக்கியுள்ளனர். பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து, சுமித்ரா ஏற்கனவே இறந்துவிட்டர் என கூறினார்கள்.


இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கிருக்காம்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#suicide #crime #girl #smartphone #mother