தூங்கும் வேலை தயார்! ரூ. 1 லட்சம் சம்பளம்
ஒரு தனியார் நிறுவனம் தூக்கத்தை பற்றிய ஆராய்ச்சிக்காக 100 நாட்களுக்கு தினமும் ஒன்பது மணி நேரம் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்க உள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வேக்பிட் இனொவேஷன்ஸ் என்ற புதிய நிறுவனம் தூக்கத்தைப் பற்றி ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இவர்கள் புதிதாக செய்ய உள்ள ஆராய்ச்சிக்காக தூக்கத்தின் மீது அதிக காதல் கொண்டவர்களை தேடிக் கொண்டிருக்கிறார். இது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் சைத்தன்யா ராமலிங்கம் கவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது :
வாழ்க்கை மற்றும் வேலை இரண்டையும் சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம் நம் உடல் ஆரோகியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம். இதற்கு தூக்கத்தின் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் தேவைப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு எங்கள் நிறுவனம் சார்பில் படுக்கை இன்று கொடுக்கப்படும். அவர்கள் வழக்கம் போல் தங்கள் வேலைகளை செய்யலாம். தினமும் இரவில் நாங்கள் கொடுத்த படுக்கையில் தான் படுக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒன்பது மணி நேரம் உறங்க வேண்டும். மேலும் இரவு படுக்க போகும் போது பைஜாமா உடையை அணிந்து தான் தூங்க வேண்டும்.
இப்படி 100 நாட்களுக்கு உறங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மடிக்கணினி உபயோகிக்க கூடாது. பின்னர் ஒவ்வொருவரின் உடலிலும் தூக்கத்தை கண் காணிக்கும் கருவி பொருத்தி அதன் மூலம் அவர்கள் உறங்கும் விகிதம் குறித்தும், குறிப்பிட்ட படுக்கையில் படுகையில் படுத்து உறங்கும் முன்னும் பின்னும் உள்ள மாற்றங்கள் குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதை 100 நாட்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு
ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்க உள்ளோம் என கூறியுள்ளனர். தூங்குவதற்கு அதிக விருப்பமும், ஆர்வமும், மற்றும் சிறிய இடைவெளி கிடைத்தாலும் தூங்கிவிடும் தன்மை கொண்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.
#Sleeping #Work #Salary #1Lakh