12.1 C
Munich
Monday, October 3, 2022

இந்தியா முழுவதும் ஸ்கோடா ஸ்லாவியா காட்சிப்படுத்தப்படுகிறது

Must read

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம்  தனது புத்தம் புதிய பிரிமியம் மிட்-சைஸ் செடான் ஸ்லேவியா வாகனத்தை இந்தியா முழுவதுமுள்ள அனைத்து ஷோரூம்களில் காட்சிப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாகனத்தின் தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவதுடன், அதன் சிறப்பான அம்சங்களுடன்  ஆழ்ந்து மகிழலாம்.  முன்-பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், சோதனை ஓட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வாகனம் வழங்கல்கள் விலை அறிவுப்புக்குப் பின்னர் 2022 மார்ச்சில் தொடங்கும். இந்தியா முழுவதும் 150+ ஷோரூம்களில் ஸ்லேவியா கிடைக்கும். ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கு ஸ்லேவியா இரண்டாவது வாகனமாகும்.  2021 ஜூலையில் அறிமுகமான குஷாக் எஸ்யுவி-ஐத் தொடர்ந்து எம்க்யூபி-ஏஓ-ஐஎன் தள அடிப்படையில் இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

பிரிமியம் நடுத்தர பிரிவில் 1752எம்எம் அளவுடன் ஸ்கோடா ஸ்லேவியா 5 நபர்கள் வசதியாக கேபினில் அமரும் வகையில் தாராள இட வசதியும் கொண்ட அகலமான வாகனமாகும்.  ஸ்லேவியா வாகனத்தின் 521 லிட்டர் திறனுடன் கணிசமான் பூட் ஸ்பேஸும் உண்டு. பின் பக்க இருக்கைகளில் உட்கார ஏராளமான இடத்துடன், இரட்டை ஏசி வெண்ட் மற்றும் சார்ஜ் செய்வதற்கு இரட்டை யுஎஸ்பி போர்ட் என பயணிகளுக்கான வசதியையும், சுகத்தையும் தருகிறது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் 85 கேடபிள்யூ (115 பிஎஸ்) மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் 110 கேடபிள்யூ  (150பிஎஸ்) திறன் கொண்ட ஸ்லேவியா வாகனத்தில் 5 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் ஆட்டோமேடிக், 7ஸ்பீட் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன்கள் உள்ளன. வாகனத்தின் உட்புற முன்பக்கத்தில் வளைவான ஏசி வெண்ட்களுடன் கூடிய டேஷ்போர்ட், பொழுதுபோக்கு மற்றும் வழிகாட்ட 25.4 செமீ (10 இன்ச்) டச் ஸ்க்ரீன், ஸ்மார்ட்லிங்க் தொழில்நுட்பம், 6 ஏர்பேக், ஆண்டி-லாக் பிரேக்ஸ், மின்னணு ஸ்டபிலிடி கட்டுப்பாடு, மல்டி-கொலிஷன் பிரேக், பின் இருக்கைகளில் ஐஸோஃபிக்ஸ் ஆங்கர் மற்றும் டெதெர் பாயிண்ட் ஆங்கர், கேபினுக்குள் வரும் வெளிப்புறக் காற்றை வடிகட்டிச் சுத்தப்படுத்த ஏர்கேர் ஃபங்ஷன், ஆட்டோமேடிக் முகப்பு விளக்குகள், மழையை உணரும் வைப்பர், சாலை மற்றும் தட்பவெப்பம் எவ்வாறு இருப்பினும், காட்சியை மேம்படுத்த டயர்களில் காற்று அழுத்த உணர்வி, உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா, பிராண்ட் இயக்குனர், ஜாக் ஹோலிஸ் கூறுகையில் ‘2.0 திட்டத்தின் கீழ் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவுக்கு ஸ்லேவியா இரண்டாவது வைரமாகும்.  இந்த செடான் சந்தையில் எங்கள் இருப்பிடத்தை  வலுப்படுத்துவதுடன், பிரிமியம் நடுத்தர செடான் பிரிவுக்குப் புத்தாற்றலையும், புத்துயிரையும் வழங்கும்.  ஸ்லேவியா வாகன அறிமுகம் மூலம் செடான்கள் மீதான ஆர்வத்தை மீண்டும் கொண்டு வர முடியுமென நம்புகிறோம்.  இந்த அழகான வாகனம் இப்போது வாடிக்கையாளர்கள் அருகே நெருங்கி வந்துள்ளது. ஸ்லேவியா பெயர் புதிய மரபின் வரவு என்னும் வகையில், இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கு  மிகவும் முக்கியமாகும் ‘ என்றார். 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article