12.1 C
Munich
Monday, October 3, 2022

ஸ்கோடா ஆட்டோ அதன் செடான் வாகனம் ஸ்லேவியாவின் விலைப்பட்டியலை அறிவித்தது

Must read

ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது புத்தம் புதிய ஸ்லேவியா 1.0 டிஎஸ்ஐ செடான் வாகனத்தை ரூ 10.69 லட்சம்  விலையில்  அறிமுகப்படுத்தியது.  இரு டிரான்ஸ்மிஷன் வாய்ப்புகளுடன் மூன்று வேரியண்ட்களில் ஸ்லேவியா 1.0 டிஎஸ்ஐ கிடைக்கும். ஆக்டிவ் மாடலின் மேனுவல்  இயக்க கார் ரூ.10,69,000 லட்சத்திற்கும், ஆம்பிஷன் மாடலில் மேனுவல் ரூ. 12,39,000க்கும், ஆட்டோமேடிக் ரூ13,59,000 லட்சத்திற்கும் கிடைக்கிறது.  ஸ்டைல் மாடலின் மேனுவல் ரூ13,99,000 லட்சத்திற்கும், ஆட்டோமேட்டிக் ரூ15,39,000 லட்சத்திற்கும் கிடைக்கிறது. ஸ்டைல் (சன்ரூஃப் அல்லாத மாடல்) ரூ.13,59,000க்கு கிடைக்கிறது.  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எம்க்யூபி-ஏஓ-இன் தளத்தில் 2021இல் அறிமுகமான ‘குஷாக்’ எஸ்யூவி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.  புத்தம் புதிய ஸ்லேவியா 1.0 டிஎஸ்ஐ வாகனம் 1 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆற்றல் கொண்டது. 6 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் டார்க் கன்வர்டர் ஆட்டோமேடிக் வழியே முன் சக்கரங்களுக்கு 85 கேடபிள்யூ (115 பிஎஸ்) ஆற்றல், 178 என்எம் டார்க்  திறனை அனுப்புகிறது. 19.47 கிமீ/1 லிட்டர் எரிபொருள் திறனுடன் 10.7 வினாடிகளில் 100 கிமீ / 1 மணி என்ற கணக்கில் இதன் டிஎஸ்ஐ எஞ்சின்  வேகமெடுக்கும். செடான் எக்ஸ்க்ளூசிவ் க்ரிஸ்டல் ப்ளூ, டொர்னாடோ ரெட் எக்ஸ்க்ளூசிவ் இந்தியாவுக்கு மட்டும், கேண்டி வொயிட், பிரில்லியண்ட் சில்வர் மற்றும் கார்பன் ஸ்டீல் என பல்வேறு வண்ணங்களில் ஸ்லேவியா கிடைக்கும். ஸ்கோடா ஸ்லேவியா 1.5 டிஎஸ்ஐ எஞ்சின் திறனிலும் கிடைப்பதால் இந்த செடான் வாகனம் வித்தியாசமான வாகனமாக விளங்கும்.  இதன் விவரங்கள் 2022 மார்ச் 3 அன்று வெளியாகும்.

1752 எம்எம் அகலம் மற்றும் 1507 எம்எம் உயரத்தில், ஸ்கோடா ஸ்லேவியா பிரிமியம் நடுத்தர செடான் பிரிவில், அதிகபட்ச அகலமான மற்றும் உயரமான வாகனம் இதுவே ஆகும்.  5 பெரியவர்களுக்கு தாராளமாக அமர இட வசதி,  179 எம்எம் க்ரவுண்ட் கிளியரன்ஸ், 6 ஏர்பேக், மின்னணு ஸ்டெபிலிடி கட்டுப்பாடு, மேம்பட்ட டிராக்ஷனுக்கு மின்னணு டிஃபெரென்ஷியல் அமைப்பு,  மல்டி கொலிஷன் பிரேக், பார்க்கிங்க் சென்சார், ஆட்டோமேடிக் பிரேக் டிஸ்க் க்ளீனிங்க், ரியர் வியூ கேமரா, டயர் பிரஷர் மானிடரிங்க், ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், க்ரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லெம்ப், வைபர், குழந்தைகளுக்கான இருக்கைகளின் மேற்கூரையில் ஐஸோஃபிக்ஸ் ஆங்கர் மற்றும் டெதெர் பாயிண்ட் ஆங்கர்கள், முன்புற டேஷ்போர்டில் சர்க்யுலர் ஏசி வெண்ட்கள், ஸ்கோடா ப்ளே ஆப், வயர்லெஸ் ஸ்மார்ட்லிங்க் மற்றும் ஸ்கோடா கனெக்ட் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்யும் திறனுடன் டேஷ்போர்ட் நடுவில் 25.4 செமீ (10 இன்ச்) மேம்பட்ட தொழில்நுட்ப டச் ஸ்க்ரீன், 20.32 செமீ (8 இஞ்ச்) அளவில் புரோக்கிராம் செய்யத்தக்க வண்ண டிஜிடல் காக்பிட், பின்புறம் அமர்ந்துள்ள பயணிகளுக்கு இரட்டை ஏசி வெண்ட்கள், கருவிகளைச் சார்ஜ் செய்து கொள்ள இரட்டை யுஎஸ்பி போர்ட்கள் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

 

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா, பிராண்ட் இயக்குனர், ஜேக் ஹோலிஸ் கூறுகையில் ‘புத்தம் புதிய ஸ்லேவியா 1.0 டிஎஸ்ஐ மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் நம்ப முடியாத மதிப்பை வழங்குகிறோம்.  பிரிமியம் நடுத்தர ரக செடான் வாகனம் காட்சிப்படுத்தப்பட்ட நாள் தொடங்கி அதன் வடிவமைப்புக்காக மிகச் சிறந்த பின்னூட்டத்தைப் பெற்றுள்ளது. மேலும் இதிலுள்ள மேம்பட்ட திறனுள்ள என்ஜின் தேவையான ஆற்றலையும், டார்க்கையும் தருகிறது. ஸ்லேவியா 1.0 டிஎஸ்ஐ விலை அட்டவணையில் அசத்தலான மதிப்பையும் வழங்குகிறது.  உரிமையாளருக்கான விலை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி இந்த செடான் வாகனத்தை வடிவமைத்துள்ளோம்.  இது ஸ்லேவியா வாகனத்தை முழுமையான பொருளாக்கி ஷோரூம் மற்றும் சாலையில் மட்டுமே ஒளிராமல், ஒட்டு மொத்த உரிமையாளர் அனுபவத்திலும் பிரகாசமாக ஜொலிக்கும்.  எங்களுக்கான உந்து சக்தியாக திகழும் புத்தம் புதிய ஸ்லேவியா ‘குஷாக்‘  வாகனத்துடன் ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் கணிசமான வளர்ச்சியைப் பெறுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்‘ என்றார். 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article