IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிவலிங்கத்துக்கு பூ போட்டு அர்சனை செய்த பச்சைக்கிளி

155

 

சிவலிங்கத்துக்கு பச்சைக்கிளி 15 நிமிடம் பூ போட்டு அர்ச்சனை செய்துள்ள காட்சி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள கிழக்கு புது வீதியில் சரவண சாமிகள் என்பவர் சிவஞான சித்தர் பீடம் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் சிவலிங்கத்தின் சிலையை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

நர்மதை நதியில் இருந்து இந்த சிலை கொண்டு வரப்பட்டுள்ளது. நர்மதை மருந்தீஸ்வரர் என பெயர் வைக்கப் பட்டு உள்ள இந்த சிவலிங்கத்துக்கு சரவண சாமிகள் தினமும் பூஜைகள் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த கோகிலா என்ற பக்தர் சிவஞான சித்தர் பீடத்துக்கு ஒரு பச்சைக்கிளியுடன் வந்தார். பின்னர் அவர் அங்குள்ள சிவலிங்கத்தை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பச்சைக்கிளி பறந்து சென்று சிவலிங்கத்தின் சிலை மீது உட்கார்ந்தது.

பின்னர் அந்த கிளியானது சிவலிங்கத்தின் மீது கிடந்த பூக்களை தன் அலகால் எடுத்து சிவலிங்கத்தின் மீது போட்டது. 15 நிமிட நேரம் இதேபோல் பூக்களை அந்த பச்சைக்கிளி போட்டுக்கொண்டே இருந்தது. இதை கண்டதும் அங்கு வந்த பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

#sivaligam #flower #archanai #Parrot