IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை

90

அரசியல் குறித்து கமல், ரஜினிக்கு பதில் சொல்லும் முதல்வர் சிவாஜி கணேசனை கிண்டலடிப்பதா ? பதவி உள்ளவரை தான் அரசியல் தலைவர்களுக்கு மரியாதை. ஆனால் தமிழ் உள்ளவரை சிவாஜி கணேசனுக்கு மரியாதை உண்டு என சிவாஜி நலப்பேரவை தலைவர் முதல்வர் பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் உள்ளது என தெரிவித்தார். இதற்கு அதிமுக சார்பாக பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சிவாஜி கணேசனின் நிலைமை தான் உருவாகும் என்று பேசினார். இதற்கு சிவாஜி சமூகநலப்பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிவாஜி நலப்பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு சிவாஜி கணேசனின் நிலைமை தான் ஏற்படும் என்று கிண்டலடித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வயதான பிறகுதான் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்கள் என்று எடப்பாடி கூறியது, அவருடைய தலைவர் எம்.ஜி.ஆரையும் சேர்த்துதான் கூறியிருப்பார் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் – அதிமுக கூட்டணி அமைத்தபோது, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி என்பதை மறந்து விடக்கூடாது. இந்த உண்மையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது என்றார்.

சிவாஜி கணேசனைப் பற்றி குறை கூறுவதற்கு, யார் காலையோ பிடித்து முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் இவருக்கு எந்த அருகதையும் இல்லை. சிவாஜி நினைத்திருந்தால் என்றைக்கோ அவருக்கு பதவிகள் தேடி வந்திருக்கும். ஆனால் அவருடைய சுயமரியாதையினாலேயே அவர் எந்தப் பதவியையும் தேடிப் போகவில்லை.

சிவாஜி கணேசன் அரசியலில் எந்த அளவில் உச்சத்தில் இருந்தார் என்றால், பவுன் நூறு ரூபாய்க்கு விற்கும் போதே யுத்த நிதிக்காக ஒன்றரை இலட்சம் ரூபாயை சொந்த பணத்திலிருந்து அளித்தவர். அண்ணா, காமராஜர், நேரு, இந்திரா போன்ற மூத்த தலைவர்களின் அன்பைப் பெற்றவர். அவரை முதல்வர் கேவலமாக விமர்சிப்பதா ? என சிவாஜியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.