IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிவகாமிபுரம் மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

102

பொங்கல் பண்டிகையையொட்டி சிவகாமிபுரம் மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் மலர் சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி சேலம், எடப்பாடி, ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் கொண்டு வரப்படும். இங்கிருந்து தென்காசி, நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் வியாபாரிகள் ஏலத்தில் மலர்களை எடுத்துச்செல்வர்.

நிகழாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இச்சந்தையில் செவ்வாய்கிழமை நிலவரப்படி கிலோவுக்கு மல்லிகை ரூ.2000, முல்லை ரூ.2000, பிச்சி 1800-2000, கனகாம்பரம்-ரூ.1000 சம்பங்கி ரூ.250, நந்தியாவட்டை ரூ.250-300, அரளி-ரூ.250, ரோஸ் 40(100 எண்ணம்), மஞ்சள் செவ்வந்தி ரூ.130, வெள்ளை செவ்வந்தி ரூ.150, சிகப்பு செவ்வந்தி ரூ.170, கோழி ரூ.70-80 ஆக இருந்தது.

கடந்த வாரம் விற்பனையான பூக்களின் விலையை விட தற்போது 2 மடங்கு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.