IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரனோவை கட்டுப்படுத்த களமிறங்கிய ரோபோக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல இலட்சம் மக்களை தாக்கியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் வைரஸின் தாக்கம் பரவாமல் இருக்க அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் பொது இடங்களில் கூடுவதும், கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

ஆனால் பல நூறு மக்கள் வந்து செல்லும் மருத்துவமனைகளில் சுகாதாரத்தை பேணுதல் என்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான். இருப்பினும் இதனை சரி செய்ய ஒரு ரோபோ களத்தில் இறங்கி உள்ளது. கொரனோவை முழுமையாக எதிர்கொள்ள ஷங்காயை சேர்ந்த கீனான் ரோபோடிக்ஸால் உருவாக்கப்பட்டுள்ளது ஒரு ரோபோ.

UV வெளிச்சம் மற்றும் கிருமிநாசினிகளை கொண்டு இந்த ரோபோ COVID-19 நுண்ணுயிர்களை அழிக்கிறது. ஒரு சராசரி மனிதனின் உயரத்தில் இருக்கும் இந்த ரோபோ, 72 கிலோ எடை உள்ளதாகும். உருவத்தில் மனிதனைப் போன்று இருந்தாலும் சுமார் 1500 லிட்டர் கிருமி நாசினிகளை சுமந்து கொண்டு சுற்றுப்புறம் முழுவதும் தெளித்து சுத்தமாக வைக்க உதவுகிறது.

இதனை ஒருமுறை சார்ஜ் செய்ய 6 மணிநேரம் எடுத்துக்கொள்ளும். சார்ஜ் செய்த பிறகு தொடர்ந்து 8 மணிநேரம் கிருமிநாசினிகளை தெளிக்க முடியும். மேலும் இந்த ரோபோக்கள் நடந்து செல்லும் பகுதியில் வரும் காற்றில் ஏதேனும் அசுத்தம் இருந்தால் அந்த தகவலை சேகரித்துக் கொண்டு பின்பு அந்த இடத்திற்கு வரும்போது அந்த இடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கூடுதலாக கிருமிநாசினிகளை தெளிக்கும்.

இதனை உள்ளே மட்டும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5° கோணம் வரை இதனை மாற்றி அமைத்து ராம்பிலும் உபயோகப்படுத்தலாம். இது பற்றி கீனான் ரோபோட்டிக்ஸ் இன்டர்நேஷனலை சேர்ந்த சிமி வாங் கூறுகையில்,”இது COVID-19 பாதுகாப்பிற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவிய பிறகு உணவு, மருந்து மற்றும் ஆவணங்களை வழங்க எங்கள் ரோபோக்களை பயன்படுத்த வேண்டி பல மருத்துவமனைகள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து நாங்கள் கிருமிநாசினிகள் தெளிக்க ரோபோக்களை தற்போது வடிவமைத்துள்ளோம். இதன் விலை 40,000 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 30 லட்ச ரூபாயாகும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More