IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாத்ரூம் போகனும்..னா கூட 100 ரூபாய் பெட்ரோல் போடனுமாம் ! ஹைவேஸ் கொடுமைகள்

0 44

குடும்பத்தினருடன் நேற்று (13/10/2019) மாலை தஞ்சை , திருச்சி வாயிலாக சென்னைக்கு, இரண்டு வண்டியில் ,வந்து கொண்டிருந்தனர்.

தஞ்சை தாண்டி , ஒரு இடத்தில் டீசல் போட்டோம், அங்கு AIR பிடிக்கும் மெஷின் கோளாறு என்பதால் வேறு இடத்தில் பிடிக்கலாம் என வந்து திருவெறும்பூர் தாண்டி அரியமங்கலத்தில் Reliance Market அருகே இருக்கும் இந்த Reliance Petrol Bunkக்கு வந்து AIR செக் செய்து கொண்டிருந்தோம்… இரண்டு வண்டி க்கும் செக் செய்து அந்த ஊழியர்க்கு இருபது ரூபாய் கொடுத்தோம்.. விஷயம் அதுவல்ல…

இதற்கிடையில், உறவினர் பெண்மணி ஒருவர் டாய்லெட் போக, bunk ஊழியரிடம் டாய்லெட் எங்கிருக்கு என்று வயதில் மூத்தவராக இருக்கிறாரே என பெரியவரிடம் கேட்டிருக்கிறார்….
“அண்ணா… இங்க டாய்லெட் எங்க இருக்கு…” என்று கேட்டார். உடனே “‌‌…” பார்த்து விட்டு வேறு பக்கம் திரும்பி இருக்கிறார். ” அண்ணா… டாய்லெட் எங்க இருக்கு… கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிறேன்”

” இருக்கு காட்டறேன்… ஆனால் நீங்க குறைஞ்சது நூறு ரூபாய் க்கு டீசல் போடணும்…. இல்லன்னா முடியாது ‌..” என பங்கு ஊழியார் கூறினார்.

போன வேகத்திலேயே மறுபடியும் வண்டிக்கு வந்த பெண்மணி அழுகை அடைக்க “இந்த மாதிரி கேட்குறாங்க… எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு…” என சொல்லி வண்டியில் வந்து ஏறிக்கொண்டார்… கண்கள் குளமாக.

கேட்ட எனக்கு சுள்ளென்று இருந்தது… இறங்கி சென்றுஅந்த பெரியவரிடம் கேட்டேன்.

“ஏங்க..ஒரு லேடி… அவசரத்துக்கு டாய்லெட் போக கேட்ருக்காங்க… நாங்க உங்க bunkல தான் AIR புடிக்கிறோம்… டீசல் போட்டா தான் டாய்லெட் ன்னு சொல்லி இருக்கீங்க…. ??!?”

“ஆமாம் இப்ப அதுக்கு என்ன… இங்க அப்படி தான்…”

“Highwayல bunk வெச்சுருக்கீங்க… Highway bunkல AIR, WATER freeya தர ணும் ன்னு ரூல் இருக்கு… Reliance bunk ன்னு பெத்த பெயர் வேற…” எனக்கூற,

“அதெல்லாம் அப்படி தான் சார்….” கூட இரண்டு நபர்கள் சேர்ந்து கொண்டார்கள். “உங்க ஓனர் யாரு…. ஓனர் கிட்ட பேசணும்…”

“அதெல்லாம் இல்ல சார்.. டீசல் போட்டா தான் டாய்லெட்…” என்றார் இன்னொரு அறிவாளி.

என் கோபம் கொஞ்சம் அதிகமாகவே மாறியது.
” ஏன்யா.. உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்ல… ஒரு லேடி… urgent க்கு டாய்லெட் யூஸ் பண்ணிக்க கேட்கிறாங்க… highway bunk ல இப்படி பேசுறீங்க… வெட்கமா இல்லையா.. காசால அடிச்ச பிண்டங்களா…” என என் குரல் உயர… என் உறவினர்கள் சிலர் வந்து விட்டனர்.
அவர்களும் கேட்க….
“இங்க அப்படி தான்… எங்க வேணும்னாலும் complaint பண்ணிக்குங்க… ஒன்னும் செய்ய முடியாது..” என்றனர் கூட்டமாக சொல்லி விட்டு சிரித்த படி நடந்தும் சென்றனர்..

நம் ஊர்… இவ்வளவு மோசமான நிலையிலா உள்ளது ? தமிழ் தாய், பாரத தாய் என்கிறோம்…ஜீவ நதிகளுக்கு பெண் பெயர்…எல்லா திசையிலும் அம்மன் வழிபாடு… பெண் க்காக பேசி பாடிய போராடிய பெரும் ஆளுமைகள்…பெண்களுக்கு முன்னுரிமை, சிங்க பெண்ணே ட்ரென்டிங்‌… வெங்காயம் கத்திரிக்கா… இதெல்லாம் ஏட்டளவில் தான்…

Bunkல AIR புடுக்கிறோம்..புடிக்கல… டீசல் போடுறோம் இல்ல…அத விடுங்க… நீங்க உங்கள் public இடத்துலே ஒரு பெண்மணி அவசரத்துக்கு டாய்லெட் யூஸ் பண்ணிக்கிறேன் ன்னு சொல்லும் போது… நூறு ரூபாய்க்கு வியாபாரம் வாங்கு அப்பறம் டாய்லெட் யூஸ் பண்ணிக்க ன்னு சொல்லும் கேடு கெட்ட நிலையிலா இருக்கிறோம்…

நம் ஊரில் இன்னும் அரசாங்க பராமரிப்பு public figure toilets சொல்லிக்கும் படி இல்லை என்பதால் ஹோட்டல் , Petrol Bunk இவற்றை நம்பி தான் பயணங்கள் உள்ளன… ஆடவர்கள் பொதுவில் ஓப்பனில் செல்கிறார்கள்… ஆனால் பெண்கள் நிலை? பெண்கள் நம் நாட்டில் இப்படி அவசரத்தை கட்டுப்படுத்தி தான் நிறையவே infection ஆகிறது என சொல்கிறார்கள் மருத்துவர்கள். பெண்களுக்கு இயற்கை காரணங்களால் டாய்லெட் வசதி இன்னும் கூடுதலாகவே அவசியமாகிறது..

ஆனால் இப்படிப்பட்ட ஜந்துக்கள் சூழ் உலகால் பெண்கள் படும் அவதி சொல்லில் அடங்காதது. கடுப்பும் கோபத்திலும் வண்டியில் ஏற வந்த நான்…என்னமோ தோன்ற.. மறுபடியும் சென்று இந்த ஃபோட்டோக்கள் எடுக்க ஆரம்பித்தேன்…

அதுக்கு “ஃபோட்டோ எடுத்து என்ன பண்ண போறீங்க… எங்களை ஒன்னும் பண்ண முடியாது…” என்றனர்…எகத்தாலமாக‌.

ஒன்னும் செய்ய முடியாது தான்.‌.. இல்லை???

இந்த bunk பெரிய புள்ளியோடதா இருக்கலாம்…பண முதலைகளோடதா இருக்கலாம்… அந்த திமிர் இவர்களுக்கு வந்து இருக்கலாம் ‌.‌..முக்கியமாக… பொது மக்கள் தானே…99% மக்கள் இத்தகைய விஷயத்தை தட்டி கேட்க மாட்டார்கள்… யாருக்கோ தானே… நமக்கென்ன என‌ விட்டு விடுவார்கள் என்கிற திமிர் தான் பிரதானமாக இருக்கும் ‌… அதானே பிக் பாஸ் தப்பா முடிவெடுத்தா கேட்போம்…நம்மை சுற்றி நடக்கும் இப்படி அறமற்ற பெண்கள் விரோத செயல்களை கேட்டு என்ன ஆக போகிறது??

திருச்சி திருவெறும்பூர் அரியமங்கலம் பால் பண்ணை வாழ் மக்களே…உங்களை சுற்றி இப்படி மனிதம், பெண்மைக்கு மரியாதை, அறம் இல்லா ஏதுமற்ற விலங்குகள் உலா வருகிறார்கள் என அறிவீர்களாக… என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
#ShameOnYouReliance #ReliancePetrolBunk #Trichy #Ariyamangalam #Tiruverumbur #Reliance