IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆபாச படம் பார்ப்பதைக் கண்டித்த மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்!

Get real time updates directly on you device, subscribe now.

ஆபாச படம் பார்ப்பதைக் கண்டித்த மனைவியை கணவனே கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இலங்கையைச் சேர்ந்தவர் தனபாலசிங்கம். கனடாவில் பணியாற்றி வருகிறார். இவர் தர்ஷிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இலங்கையில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு தனபாலசிங்கம் வேலை காரணமாக கனடாவுக்கே சென்று விட்டார். தர்ஷிகா தனது பெற்றோருடன் இலங்கையில் வசித்து வந்தார்.


முகநூல் காதலனை நேரில் பார்த்ததும் தெறித்து ஓடிய காதலி

பின்னர் சில நாட்களில் கணருடன் வாழ வேண்டும் என்பதற்காக தர்ஷிகா கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இருவரும் அங்கு சந்தோஷமாக இருந்து வந்ததனர். இந்நிலையில் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டைகள் வர தொடங்கின. நாளுக்கு நாள் சண்டை அதிகமானதால், இனியும் சேர்ந்து வாழ்வத்தில் அர்த்தமில்லை என நினைத்த தர்ஷிகா, கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது உத்தரவிட்டார்.


ஆனால் தனபாலசிங்கம் நீதிமன்ற உத்தரவை மீறி தர்ஷிகாவை சந்தித்து பேச முயன்றார். இதனால் அவர்களுக்குல் மோதல் உருவானது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்திகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கனடா காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணையின்போது தனபாலசிங்கம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது.


அதனால் தனபாலசிங்கம் வீட்டில் வைத்திருந்த பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஏராளமான ஆணுறைகள் மற்றும் ஆபாசப் படங்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் போலீசார் கிடுக்குபிடி விசாரணை செய்தனர். அப்போது தனபாலசிங்கம் அளித்த வாக்குமூலத்தில், கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவரது மனைவி தர்ஷிகாவும் அந்த பெட்டியில் இருந்த ஆணுறைகள் மற்றும் ஆபாச படங்களைப் பார்த்திருக்கிறார். அதுபற்றி கேட்டபோதுதான் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனபாலசிங்கம், தர்ஷிகா தூங்கி கொண்டிருந்தபோது தலையனையை வைத்து முகத்தை அமுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற தர்ஷிகாவை விரட்டிப் பிடித்து கத்தியால் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.


இது தொடர்பான விசாரணையில் தனபாலசிங்கம் தனது மனைவி தர்ஷிகாவை கொலை செய்ய பல முறை முயன்றதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

#sexmovie #murder #wife #crime #husband

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader