IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

செப்டம்பர் 11 தாக்குதல் – இன்றும் கேள்விக்குள்ளாகும் சில சந்தேகங்கள்

3

இரண்டாம் உலகப் போரில் பியர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பின்பு அமெரிக்கர்கள் சந்தித்த மிகப்பெரிய கோரத் தாக்குதல் தான்
இரட்டை கோபுர இடிப்பு.


கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலகின் தூங்க நகரம் என்று வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரம் வழக்கம்போல் தன் புத்துணர்ச்சியான காலைப் பொழுதை கழிக்க ஆரம்பித்தது.


அன்றைய தினத்தின் உலக பொருளாதாரத்தை கணக்கிட, 110 மாடிகள் கொண்ட உலக வர்த்த மைய இரட்டை கட்டிட அலுவலகங்களும் தன் பணியை ஆரம்பித்தது.


சரியாக காலை 8.46 மணி அளவில் வர்த்தக மையக் கட்டிடத்தின் வடக்கு கோபுரத்தின் 93 மற்றும் 99 மாடிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் திடீரென விமானம் ஒன்று அதிபயங்கர வேகத்துடன் மோதியது.


சற்றும் எதிர்பாராத பொதுமக்களும் ஊடகங்களும் விமானம், விபத்தில் சிக்கிக்கொண்டதாக எண்ணி பீதியடைந்தனர். 81 பயணிகள், 11 பணியாளர்களுடன் பாஸ்டனின் சர்வதேச லோகன் விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 767 விமானம் தான் அது ! விமானம் மோதி, உலக வர்த்தக மையங்கள் கரும்புகையை நியுயார்க் வானத்தில் கக்கிக்கொண்டிருந்த சமயம், 18 நிமிடங்கள் கழித்து 56 பயணிகள் 9 பணியாளர்களுடன் அதே பாஸ்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யுனைடட் ஏர்லைன்ஸ் 175 போயிங் 757 விமானம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தில் மோதி தாக்கியது.
அப்போது தான், இது திட்டமிடப்பட்ட சதி என ஊடகங்கள் உறுதி செய்தது. பொதுமக்கள் தங்கள் நாடு பாதுகாப்பில்லை என்பதை உணர ஆரம்பித்த தருணங்கள்.


அமெரிக்காவின் ஆளுமையை உலகிற்கு பறைச்சாற்றிக் கொண்டிருந்த அந்த இரட்டை சகோதரர்கள் சீட்டுக் கட்டு போல சில மணி நேரங்களில் சரிந்தார்கள்.


இதற்கு இடைப்பட்ட நேரத்தை அமெரிக்கர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். இரவுநேர பணிக்காக உலக வர்த்தக மையத்திற்கு சென்றவர்கள் மறுநாள் அதிகாலை சிக்கிக்கொண்டார்கள். எரிமலை போல் தீயுடன் கூடிய புகையை கக்கிக்கொண்டிருந்த அந்த கோபுரங்களின் உயரத்திலிருந்து பணிக்கு சென்றவர்கள் கீழே விழுந்தாவது தப்பித்து விடலாம் என்று எண்ணி, குதித்த வீடியோக்கள் இன்றளவும் பார்ப்பவர்கள் கண்களை கலங்க செய்கின்றன.


இதே பதற்றமான அதே நாளில் அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான வாஷிங்டனில் உள்ள பெண்டகன் கட்டிடமும் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தை புரட்டிப்போட்டது.


கடத்தப்பட்ட நான்காவது விமானம், வெள்ளை மாளிகையைத் தாக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் இருந்து கொண்டிருக்க பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள சாக்ஸ்வெல்லே என்ற இடத்தில் வெட்டவெளியில் விழுந்துநொறுங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள், கடத்தப்பட்டதை அறிந்து தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு விமானத்தை வீழ்த்தினர். ஆனால் அவர்கள் எந்த இடத்தை தாக்க திட்டமிட்டனர் என்ற தகவல் இன்று வரை உறுதி செய்யப்படவில்லை.


இந்த சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தார் அப்போதைய அதிபர் புஷ். இந்த தாக்குதல் விபரங்களை வெள்ளை மாளிகை உயர் அதிகாரி புஷ்ஷிடம் சொன்ன போது சற்றே நிதானமாக அமைதி காத்தாராம் அதிபர். பின்னர் பென்சில்வேனியாவில் விமானம் விழுந்த பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் அதிபர் புஷ்.


இதற்கு அடுத்து தான், ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல் கொய்தா அமைப்பின் சதி என அமெரிக்க அறிந்து கொண்டது. சில மணிநேரங்களில் ஒசாமா வெளியிட்ட ஒரு ஒலி நாடா இதை உறுதி செய்தது.

அமெரிக்கா மீது ஒசாமாவிற்கு ஏன் இவ்வளவு கோபம்


பாலஸ்தீனை ஒடுக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுவது, ஈராக் மீதான பொருளாதார தடைகள், இந்திய ஆளுமைக்கு உட்பட்ட காஷ்மீரில் காஷ்மீரிகள் மீதான ஒடுக்கு முறைக்கு அமெரிக்கா ஆதரவு தந்தது, தன் தாய்நாடான சௌதி அரேபியாவில் அமெரிக்க படைகள் முகாமிட்டது போன்ற பல காரணங்களை தாக்குதலுக்கான பின்னணியாக அடுக்கினார் ஒசாமா.


ஒசாமா வெளியிட்ட சில காணொளிக் காட்சிகள் இன்றளவும் பிரபலம் தான். அதில் ஒன்று தான், சுவற்றில் வரையப்பட்ட அதிபர் புஷ் உருவப்படத்தை ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது. இதே காட்சியை கமலும் விஸ்வரூபம் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

பின்லேடனை களையெடுக்கும் முயற்சி


செப்டம்பர் 11 தாக்குதலால் நிலைகுலைந்த அமெரிக்கா, பின்லேடனை பிடிக்க 2001, டிசம்பர் 7ம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள ஒசாமா பதுங்கியிருப்பதாக நம்பப்படும் இந்துகுஷ் மலைப்பகுதியில் தாக்குதல் வேட்டையை தொடங்கினர்.

இந்த போரில் பிரிட்டனும் கனடாவும் ஆரம்பத்தில் ஆதரவு அளித்தாலும் நேட்டோவும் கைகோர்த்தன. இதில் தாலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானை தன் வசப்படுத்தினாலும் அன்றைய காலகட்டத்தில் ஒசாமா அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாகவே இருந்தார். அப்போது அவர் பிடிபடவில்லை என்றாலும் 2011 மே 02ம் தேதி அப்போதைய அதிபர் ஒபாமாவால் தீர்த்துக்கட்டப்பட்டார் ஒசாமா.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணி சந்தேகங்கள்


சில வளர்ந்த நாடுகள் வீணாகிப்போன பிரமாண்ட கட்டிடங்களை இடிக்க அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வெடி வைத்து இடிப்பதை நாம் பார்த்திருப்போம். இதே பாணியில் உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் சரிந்தது சந்தேகங்களின் உச்சம். இந்த தாக்குதலில் யூதர்கள் கொல்லப்படவில்லை, முக்கியமாக டாக்சி டிரைவர்களான அரேபியர்கள் அந்தப் பகுதியில் இல்லை என்கின்றனர்.


விமான விபத்துக்கள் என்றால் மிக முக்கிய ஆதரமாக கருதப்படுவது கருப்புப் பெட்டி. ஆனால் செப்டம்பர் 11 தாக்குதலில் கடத்தப்பட்ட 4 விமானங்களின் கருப்பு பெட்டிகளும் தீயில் அழிந்துவிட்டதாக அமெரிக்கா சொல்வதை உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


சுமார் 3000 டிகிரி செல்சியஸில் உருகும் கருப்புப் பெட்டி எப்படி 1000 டிகிரி செல்சியஸில் உருகியதாக அமெரிக்கா சொல்லும் வாதம், ஏதோ சாப்பாட்டு தட்டில் முழு பூசணிக்காயை மறைப்பதாகவே இன்றளவும் தெரிகிறது.

கட்டுரை – எம்.சம்சுல் ஹுதா