IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்!

0 141

ரஜினிகாந்த் நடித்த 2 புதிய படங்கள் ரிலீசாக போகின்றன. எனவே அவர் பரபரப்புக்காக அரசியல் பேசுவது ஒன்றும் புதிதல்ல என கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் புதிய அலுவலகத்தில் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் சிலை திறக்கும் விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிப்பது போல் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியில் திருவள்ளுவரும் சிக்கமாட்டார். நானும் சிக்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்ற அவர் பேட்டி கொடுத்தார். அங்கு பேசுகையில் நான் எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசி வருகிறேன். நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். ஆளுமை மிக்க சரியான தலைமைக்கு தமிழகம் தற்போது வெற்றிடத்தில் உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கூறிய கருத்து குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது வெற்றிடம் இல்லை. ரஜினிகாந்த் படம் வெளியாகும் போது எப்போதும் இப்படிதான் பரபரப்புக்காக ஏதாவது பேசுவது வழக்கம் தான். தற்போது தர்பார் உள்ளிட்ட படங்கள் வெளியாகுவதால் அவர் பப்ளிசிட்டிக்காக அப்படி பேசியிருக்கிறார் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.