IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும்! செல்லூர் ராஜு தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பதை முன்னிட்டு, டெல்டா மாவட்டங்களில் பயிர் கடன் இடுபொருள்கள், உர விநியோகம் தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார்.

கூட்டத்திற்கு முன்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில். குறுவை சாகுபடி பணியை மேற்கொள்ள டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன் 2564 கோடி வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த மே மாதம் வரை 43 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது கட்டாயமில்லை. இதுவரை விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறினார்.

மேலும் அடுத்த மாதமும் ரேஷன் கடைகளில் இலவச மானிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில். இந்த மாதத்தோடு கொரோனா முடியட்டும் என்று நினையுங்கள். தொடர வேண்டும் என்று நினைக்காதீர்கள் என்று அவர் கூறினார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader