IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழிசை சௌந்திர ராஜனுக்கு வக்காலத்து வாங்கும் சீமான்

19


தமிழக மாநில தலைவராக இருந்த சௌந்திரராஜன் தற்போது தெலங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து சீமான் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.


தெலங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்திரராஜன் அரசியல் வாழ்க்கையில் நீண்டநாள் அனுபவமும் பொறுப்பும் இருப்பதாக சீமான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி கூறிய சர்க்காரியா கமிஷன் விதியின்படி கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களை ஆளுநராக தேர்வு செய்யமுடியாது என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


பொருளாதார சரிவை கண்டுபிடித்த தமிழிசை!

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தெலங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை அரசியல் வாழ்வில் நீண்டநாள் அனுபவம் இருப்பதாக சீமான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தெலங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை அரசியல் வாழ்வில் நீண்டநாள் அனுபவம் இருப்பதாக சீமான் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.


ஆனால் அரசியல் மேடைகளில், பாஜக கட்சிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறியதற்கு மயிரோடு மலரும் என்று சீமான் கடுமையாக பேசியுள்ளார். இந்நிலையில் தெலங்கானா கவர்னராக தமிழிசை பொறுப்பேற்றதும் அவருக்கு வக்காலத்து வாங்க ஆதரவு தெரிவித்துள்ளார் சீமான் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
#Seeman #Support #TamilisaiSoundarrajan #Telangana #Governor