IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சீட்ஸ் மற்றும் ஹனிவெல் இணைந்து ஐந்து நகரங்களில் 3.7 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கினர்

Get real time updates directly on you device, subscribe now.

பெங்களூரு, டெல்லி, குர்கான், மதுரை மற்றும் புனே முழுவதும் உணவு மற்றும் சுகாதார கருவிகளை விநியோகிக்க ஹனிவெல் இந்தியாவுடன் முன்னணி அமைப்பான சீட்ஸ் உடன் இணைந்துள்ளது. கோவிட்-19 நெருக்கடியால் உதவியற்ற குடும்பங்களுக்கு 3.7 மில்லியனுக்கும் அதிகமான உணவை வழங்க முயன்று வருகின்றது. கூடுதலாக, ஒரு மாதத்திற்கான சுகாதார கருவிகள் 12,300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அளித்து வரப்படுகின்றன.

இதுபற்றி சீட்ஸின் இணை நிறுவனர் டாக்டர் மனு குப்தா கூறுகையில், “1% பாதிக்கப்படக்கூடிய மக்களை சென்றடைய எங்கள் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், சீட்ஸ் ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள், குடும்ப சுகாதாரம் மற்றும் பிபிஇ கருவிகள், நிதி உதவிகள் ஆகியவற்றை கோவிட் 19 னால் மிகவும் சிரமப்படுவோருக்கு வழங்கி வருகிறது, என்றார்.

மதுரையில், எஸ்.வெங்கடேசன் எம்.பி. உதவிகளை வழங்கினார். அவர் கூறுகையில், “சீட்ஸ் மற்றும் ஹனிவெல் விநியோக இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திரா காலனி மற்றும் காரியாபட்டியில் இந்த பொருட்களை நாங்கள் விநியோகித்தாலும், எதிர்வரும் நாட்களில் நகரின் மேலும் அதிக பகுதிகளை உள்ளடக்கி உதவுவோம்” என்றார்.

ஹனிவெல் இந்தியாவின் தலைவர் டாக்டர் அக்‌ஷய் பெல்லாரி கூறுகையில், “ஒரு பொறுப்புள்ள கார்ப்பரேட் குடிமகனாக, ஹனிவெல் நாட்டில் கோவிட் -19 நிவாரண முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்து வருகிறது. நாங்கள் ஹனிவெல் காற்று சுத்திகரிப்பாளர்களை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளோம், மேலும் எங்கள் 180 பாதுகாப்பான நீர் நிலையங்கள் சமூக விலகலை உறுதிசெய்து மக்களுக்கு தொடர்ந்து தண்ணீரை வழங்குகின்றன. சீட்ஸ் உடனான எங்கள் கூட்டாண்மை மூலம், இப்போது அவசியமான உணவு மற்றும் சுகாதார கருவிகளுடன் மிகவும் பாதிக்கப்பட்டிருப்போருக்கு உதவுவோம், என்றார்.

கோவிட்-19 வெடிப்பு மற்றும் நாடு தழுவிய ஊரடங்கின் தொடக்கத்திலிருந்து, இந்தியா முழுவதும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத சமூகங்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய சீட்ஸின் உள்ளூர் குழுக்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குழு உறுப்பினர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர்.

கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த, சீட்ஸ் பிபிஇ கருவிகளை வழங்குவதன் மூலமும், பாதுகாப்பு பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும், தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் பொது சுகாதார அமைப்புகளை ஆதரிக்கிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader