17.1 C
Munich
Tuesday, August 9, 2022

பல நூற்றாண்டுகள் கடந்தும் அதிசியம் கொண்ட மோனலிசா புகைப்படம்

Must read

மோனலிசா புகைப்படத்தை வரைந்தவர் லியொனார்டோ டா வின்சி. 1503லிருந்து 1506ம் ஆண்டு வரைக்குள் இந்த புகைப்படம் வரைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வரைய மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.

1503ம் ஆண்டு இத்தாலியின் மன்னராக இருந்த பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோ தனது மனைவி லிசா டெல் கியோகாண்டோ மீது அதீத காதல் கொண்டிருந்தார்.

எனவே அவர் மாதிரியே ஒரு புகைப்படம் வரைய சொல்லி லியொனார்டோ டா வின்சியிடம் கூற அதன் பிறகு வரையப்பட்ட ஓவியம் தான் மோனலிசா புகைப்படம்.

1503ம் ஆண்டிலேயே இந்த புகைப்படத்தை லியொனார்டோ வரைந்து முடித்துள்ளார். ஆனால் அந்த புகைப்படம் அவருக்கு திருப்தி அளிக்காததால் 1507ம் ஆண்டு மோனலிசா புகைப்படத்தை சிறு சிறு திருத்தங்கள் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இந்த புகைப்படம் ஆயில் பெயிண்டிங் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. இதற்காக லம்பார்டிப்போ பேனலை பயன்படுத்தியுள்ளனர். ஒரிஜினல் புகைப்படத்தை உற்றுப்பார்த்தால் சிறுசிறு கட்டங்களாக தெரியும்.

ஓவியத்தை வரைந்து முடிந்ததும் டெல் கியோகாண்டோ மன்னரிடம் லியொனார்டோ கொடுக்கவில்லை. அந்த புகைப்படத்தின் அழகில் மயங்கிய அவர் இந்த புகைப்படம் தன்னோட பொக்கிஷம் எனக்கூறி தன்னிடமே வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தின் உண்மையான அளவு 77 X 53 செ.மீ ஆகும். இந்த புகைப்படத்தினை வரைந்து முடித்ததும் சட்டென்று மர சட்டத்தினுள் பொருத்திவிட்டனர்.

லேசான பிரவுன் கலரில் இருக்கும் இந்த புகைப்படம் பார்க்க பார்க்க ரசிக்க தோன்றும் வகையில் இருப்பதே இதன் சிறப்பாகும்.

பெயிண்டிங் வரைந்து கொண்டிருக்ம் போதே லியொனார்டோ இத்தாலியிருந்து பிரான்சிற்கு குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்து வருகிறார். அங்கு பிரான்ஸ் மன்னர் பிரான்கோயிஸ் 1 அந்த பெயிண்டிங்கை அவரிடமிருந்து பேசி வாங்கிவிடுகிறார்.

பிரான்ஸ் மன்னர் பிரான்கோயிஸ் தனது பிரம்மாண்டமான மாளிகையில் முக்கியமான இடத்தில் மோனலிசா புகைப்படத்தை வைத்து ரசித்துள்ளார்.

கிட்டத்தட்ட 100 வருடங்கள் அந்த இடத்தில் மோனலிசா புகைப்படம் இருந்துள்ளது. அதன்பிறகு பல கைகள் மாறி 19ம் நூற்றாண்டில் மாமன்னர் நெப்போலியன் கைகளுக்கு வந்துள்ளது. அவரும் அதனை சுவற்றில் மாட்டி ரசித்துள்ளார்.

சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் லியொனார்டோ தன்னைத் தானே ஒரு பெண்ணாக நினைத்து வரைந்து கொண்ட ஓவியம் எனக்கூறி நிறைய ஆதாரங்களை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஆனால் அந்த ஆதாரங்கள் அனைத்தும் போலியானவை எனக்கூறி அதனை ஒதுக்கிவிட்டனர்.

மோனலிசா புகைப்படம் மிகவும் பிரபலமாகி விட்டதால் அதன் மதிப்பும் அதிகரித்துவிட்டது. இதனால் 1911ல் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்திலிருந்து அதை யாரோ திருடிவிட்டனர்.

அதன்பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதனை கண்டுபிடித்துவிட்டனர். அதன்பிறகு மோனலிசா புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.

பிரபலமான இந்த ஓவியத்தை பிகாசோ தான் திருடியிருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் அப்போலியனர் என்பவர் தானாக முன்வந்து அந்த பெயிண்டிங்கை எரிக்க வேண்டும் எனக்கூறியதால் அவரை கைது செய்து சிறையில் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

பாரீஸ் நகரத்தில் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் எனும் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சரியான வெப்பநிலையில் சூரிய ஒளி அந்த புகைப்படத்தின் மீது படும்படியாக கச்சிதமாக வைக்கப்பட்டுள்ளது. இதனை யாரும் விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. இதனை பார்த்து மட்டுமே ரசிக்க முடியும்.

காலநிலைக்கு ஏற்றார் போலும், குண்டு துளைக்காத கண்ணாடி மூலமாகவும் மோனலிசா புகைப்படம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும், ஆறு மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article