12.1 C
Munich
Monday, October 3, 2022

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் கடல் மூரைகள்

Must read

பரந்த உலகில் எண்ணற்ற உயிரினங்களும் ஏராளமான அதிசியங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் ஒன்று தான் கடல் மூரைகள்.

 

கடல் மூரைகள் என்பத கடல் முள் எலி, கடல் ஊமத்தை, முத்தொலி போன்ற எண்ணற்ற பெயர்களில் அழைப்பார்கள். இதன் ஆங்கில பெயர் ஸி உர்ஜின் (sea urchin).

 

இதனை பார்ப்பதற்கு தக்காளி மேல் ஆயிரம் குண்டூசி குத்தியது போல் அழகாக இருக்கும். ஆனால் மிகவும் ஆபத்தானது.

 

கடலுக்கு அடியில் தரை பகுதிகளில் மூரைகள் வாழும். இவை உலகின் அனைத்து கடல் பகுதிகளிலும் வாழும். அதுமட்டுமின்றி இவை ஸ்டார் பிஷ் மற்றும் கடல் அட்டைகளின் குடும்பத்தை சேர்ந்தவை.

 

இவற்றின் மேல் இருக்கும் நூற்றுக்கணக்கான முட்கள் அனைத்தும் ஒவ்வொரு குழாய்கள் ஆகும். இதன் வழியாகத்தான் பல வேலைகள் செய்யும்.

 

கடல் மூரைகள் உருண்டையாக காணப்பட்டாலும் உடல்பகுதி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உடம்பின் அடிப்பகுதியில் உள்ள முட்களின் குழாய்கள் கொஞ்சம் சிறிதாகவும் வலுவானதாகவும் காணப்படும்.

அதனைப் பயன்படுத்தி தான் கடலுக்கு அடியில் மற்றும் பாறைகளுக்கு இடையில் தரைப்பகுதிகளில் ஒட்டி வாழ்கின்றன.

 

உடம்பிற்கு அடிப்பகுதியின் பக்கவாட்டில் உள்ள குழாய்கள் கொஞ்சம் கூர்மையாக இருக்கும். அதனை பயன்படுத்தி மண்ணை தோண்டி அதன் அடிப்பகுதியில் சென்று அங்கே உட்கார்ந்து கொள்ளும்.

 

மூரைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதற்கு அதன் முட்கள் தான் பயன்படுகின்றன.

 

முட்களில் உள்ள குழாய்களின் வழியாக கடல் தண்ணீர் உள்ளே சென்று வெளியே வரும் போது ஒரு உந்துதலினால் கடல் மூரைகள் நகர்கின்றன.

 

மூரைகளின் மேல் புறத்தில் உள்ள முட்கள் மிகவும் ஆபத்தானவை. அந்த முட்கள் எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கும்.

எதிரிகள் யாரேனும் தாக்க வந்தால் அந்த முட்களை வைத்து குத்தும். அது பயங்கர வலியை ஏற்படுத்தும்.

 

கடல் மூரைகளின் மேல் புறத்தில் உள்ள முட்களில் டயாடியா என்ற விஷத்தன்மை உள்ளது. உயிர் ஆபத்தை ஏற்படுத்தாவிடினும் முட்கள் குத்தினால் நீண்ட நேரம் வலியை ஏற்படுத்தும்.

 

மூரைகளின் நடுப்பகுதியில் வாய் அமைந்திருக்கும். அதை சுற்றி மெல்லிய மிகவும் வலுவான முட்கள் இருக்கும். அதனை பயன்படுத்தி தான் வலுவான செடிகளை கடித்து சாப்பிடும்.

 

ஆண் மூரைகளுக்கும் பெண் மூரைகளுக்கும் பெரிய வித்தியாசமே தெரியாது. ஆனால் அவைகளுக்குள் கண்டு தெரிந்து கொள்ளும்.

 

இனப்பெருக்க காலங்களில் பெண் மூரைகள் தன்னோட கருமுட்டைகளை தண்ணீரில் வெளியே தள்ளும். அதனை பார்த்த ஆண் மூரைகள் அதனுள் தன்னோட உயிரணுக்களை நிரப்பும்.

ஆயிரக்கணக்கான முட்டைகளை பெண் மூரைகள் போடும். அதனை கடலுக்கு அடியில் மண்ணுக்குள் புதைத்து குஞ்சுகள் பொரித்து வெளியே வரும்வரை அழகாக ஆண் மூரைகள் பாதுகாக்கும்.

 

நூற்றுக்கணக்கான முட்கள் எல்லாமே மூரைகளின் உள் நரம்புகளில் இணைந்திருக்கும். அந்த முட்கள் மூலமாக கடல் தண்ணீரை உள்ளே தள்ளி வெளியேற்றுவதன் மூலம் சுவாசிக்கவும் செய்யும். தன்னோட உடலையும் சுத்தம் செய்து கொள்ளும்.

 

வித்தியாசமான உயிரினமாக தெரிவதால் கடல் ஆராய்ச்சியாளர்களுக்கு இவை பெரிதும் உபயோகப்படுகின்றன.

 

ஆனால் கடல் நாய்கள் மற்றும் சில மீன்களுக்கு இது சிறந்த உணவாக தெரிவதால் கடல் மூரைகள் அதிகம் கொல்லப்படுகின்றன.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article