IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்!

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இளம் சாரணர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது. பள்ளியின் முதல்வர் ஜெரால்டு வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்றம் மதுரை கிளைகளின் தகவல் தொடர்பு மற்றும் புள்ளியியல் கூடுதல் பதிவாளர் மீனா கலந்து கொண்டு பயிற்சியினைத் தொடங்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, மாணவர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். யாரையும் நம்பி முடிவு எடுக்க கூடாது. ஒவ்வொரு விசயத்திலும் கடின உழைப்பு தேவை. அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ பழக வேண்டும். வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கை மிக மிக அவசியமானது ஆகும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், என்பன போன்ற அறிவுரைகளை வழங்கினார்.

இரண்டு நாட்கள் இந்த முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் மதுரை கேந்திரிய வித்யாலயா மற்றும் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த 4-ம் மற்றும் 5-ம் வகுப்பு சாரண, சாரணியர்கள் 150 பேர் பங்கேற்றுள்ளன்ர்.
#madurai #scout #TrainingCamp

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader