மின்னல் வேகத்தில் தாக்கும் பயங்கர மீன் – மன்னார் வளைகுடாவில் கண்டுபிடிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய அளவில் முதன்முறையாக மன்னார் வளைகுடா கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பேண்ட் டெயில் ஸ்கார்பியன் மீன், ஆராய்ச்சிக்காக கொச்சியில் உள்ள கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடல் 21 தீவுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் 1,400 வகையான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. மண்டபம் அடுத்துள்ள மரைக்காயர் பட்டணம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

இங்குள்ள விஞ்ஞானிகள் கடல் சார்ந்த கண்டுபிடிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றநிலையில், மீன் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி குழுவின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஜெயபாஸ்கரன் தலைமையிலான குழுவினர் சேதுக்கரை சிக்ராஸ் புல்வெளி கடல் பகுதியில் கடலுக்கு அடியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், மீன்களை வேட்டையாடும் போது நிறம் மாறிய ஒரு மீனை கண்டனர்.

இதனையடுத்து, அந்த மீனின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பாக உயிருடன் பிடித்தனர்.

இதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த மீன் பேண்ட் டெயில் கார்பியன் மீன் என்பது தெரியவந்ததன்மூலம், இது இந்திய அளவில் முதல் முறையாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன்களை மீனவர்கள் சாமி மீன் என்று அழைத்த வருகிறார்கள்.

மேலும் இந்த மீன் வேட்டையாடும் போதும், தன்னை பாதுகாத்துக்கொள்ளும் போதும் அதற்கு ஏற்றவாறு நிறங்களை மாற்றிக்கொள்ளும்.
இந்த மீன் முதுகுப் பகுதியில் நியுரோடாக்ஸிக் விஷமுள்ள கொம்புகளைக் கொண்டுள்ளது.

இந்த மீனை மனிதர்கள் உணவாகப் பயன்படுத்தினால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

மேலும் இரை தேடும் போது கடலுக்கு அடியில் அசைவில்லாமல், இரையை அதன் அருகில் வரும் வரை காத்திருந்து மின்னல் வேகத்தில் தாக்கி உறிஞ்சும் திறனுடன் இருக்கிறது.

மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சி அமைப்பைக் கொண்டிருப்பதால், இருண்ட சூழலில் 10 செ.மீ தூரத்தில் நண்டுகளால் உற்பத்தி செய்யப்படும் சுவாச காற்றோட்டம் பாய்ச்சலைக் கூட மீன் கண்டறிய முடியும்.

மற்ற மீன்களைப் போலல்லாமல் பேண்ட் டெயில் ஸ்கார்பியன் மீன் அதன் இரையை வேட்டையாட கண்களுக்கு பதிலாக அதன் பக்கவாட்டு உணர்ச்சி முறையைப் பயன்படுத்துகிறது என மூத்த விஞ்ஞானி டாக்டர் ஜெயபாஸ்கன் தெரிவித்துள்ளர்.

இந்த மீன் முக்கியமாக கோபிஸ் மற்றும் ப்ளென்னீஸ், ஓட்டுமீன்கள் மற்றும் பவளப்பாறைகள், பாறைகள் மற்றும் பாசி படுக்கைகளில் காணப்படும் பிற பெந்திக் மேக்ரோ முதுகெலும்புகள் போன்ற சிறிய பெந்திக் மீன்களுக்கு உணவளிக்கிறது.

இந்த மீன் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய கடல் பல்லுயிர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader