12.1 C
Munich
Monday, October 3, 2022

நெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்

Must read

 

மம்மிக்கு 3டி அமைப்பில் செயற்கையாக குரல் கொடுத்து விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர்.

எகிப்து நாட்டில் தீப்ஸ் நகரில் 3 ஆயிரம் ஆண்டிகளுக்கு முன்பு வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை கடந்த 1824 ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். அந்த மம்மி தற்போது இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த மம்மியின் குரலை செயற்கைக் குரல்வளைகளைக் கொண்டு உருவாக்க இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு முயற்சி மேற்கொண்டது. அதன்படி மம்மியின் பேசுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல், மற்றும் குரல்வலை அமைப்பை கொண்டு, மருத்துவர்கள் மம்மியின் குரலை தற்போது உருவாக்கியிள்ளனர்.

இந்த குரலில் மெல்லிய வார்த்தைகளை உச்சரிக்க செய்து விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர். இறந்த நபரின் குரலை விஞ்ஞானத்தின் மூலம் மீண்டும் வெற்றிகரமாக உருவாக்கும் முதல் திட்டமாக இது கருதப்படுகிறது. எதிர்காலத்தில் கணினி மாதிரிகளை பயன்படுத்தி நெஸ்யமனின் குரலில் முழு வாக்கியங்களை மீண்டும் உருவாக்க முடியும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

#Scientists #voiced #Nesyaman #mummy

 

 

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article