IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 1 மாணவியின் விபரீத முடிவு

0 20

பிளஸ் 1 மாணவியை ஆசிரியர் மற்றும் பிளஸ் 2 மாணவி திட்டியதால் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீஸ்சார் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் ஜம்புமடை பகுதியை சேர்ந்த தமிழ்குமரனின் மகள் தனப்பிரியா தேவி. இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தனப்பிரியா தேவி தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று தனப்பிரியாவுடன் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவியுடன் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் கோபம் அடைந்த பிளஸ் 2 மாணவி தனப்பிரியா தேவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.

அனைவரின் முன்பு அடித்ததால் தனப்பிரியா தேவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதை அவரால் தங்கிக் கொள்ள முடியவில்லை. அதே மனநிலையில் தனப்பிரியா தேவி வகுப்பறைக்கு வந்தார். ஏற்கனவே மனமுடைந்து இருந்த தனப்பிரியா தேவியை ஆசிரியர் ரெங்கராஜ் திட்டியுள்ளார். பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற தனப்பிரியா தேவி யாருக்கும் தெரியாமல் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் இது குறித்து தனப்பிரியா தேவி தனது தாயிடம் நடந்ததை கூறினார். அதிர்ச்சி அடைந்த தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனப்பிரியா தேவியை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தனப்பிரியா தேவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து தா.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆசிரியர் ரெங்கராஜ் மற்றும் பிளஸ் 2 மாணவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.