IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி இடம் எப்படி முரசொலி அலுவலகமானது ? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

0 65

முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் தனியாருக்கு சொந்தமான பாத்தியப்பட்ட பட்டா நிலம் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் இடத்தின் பட்டா பத்திரத்தை காண்பித்தார். அதுகுறித்து பாமக கட்சி தலைவர் ராமதாஸ் அதற்கு பதிலளித்துள்ளார்.

அதன்படி, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன? என்றுள்ளார்.

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? ஆனால் முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை என பல்வேறு கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து உண்மையான நிலவரம் வெளிவருவதற்கு ஸ்டாலின் தக்க ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.