சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ ஏற்றது! தமிழக அரசு ஒப்புதல்

Get real time updates directly on you device, subscribe now.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணை என்ற பெயரில் தந்தை மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

சிபிஐ விசாரணை தொடங்கும் விரை சிபிசிஐடி விசாரிக்கும் படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி இதுவரை விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக சி.பி.ஐ அறிவித்தது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader