IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சாத்தான்குளம் வழக்கின் தலைமைக் காவலர் ரேவதி வீட்டிற்குப் பாதுகாப்பு!

Get real time updates directly on you device, subscribe now.

சாத்தான்குளம் வழக்கின் திருப்பு முனையாக சாட்சியம் அளித்த தலைமை காவலாளி ரேவதி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தைஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை ரத்தம் சொட்ட சொட்ட விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் பெண்காவலர் ரேவதி அளித்த தகவல் தான் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் உயரதிகாரிகளால் தனக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவலர் ரேவதி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற சாத்தான்குளம் வழக்கின்போது காவலர் ரேவதியிடம் நீதிபதிகள் சில கேள்விகளை நேரிடையாக கேட்டனர்.

பின்னர் செல்போன் மூலமும் பேசினர். இதன் தொடர்ச்சியாக அரிவான் மொழியில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டு வாயிலில் இரு காவலர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கை பி.என்.பிரகாஷ், பி. புகழேந்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் சாட்சியம் அளித்து திருப்புமுனை ஏற்படுத்திய தலைமைக் காவலர் ரேவதி வீட்டிற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader