IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சாத்தான்குளம் விவகாரம் விறுவிறுப்பு! மேலும் 6 போலீசார்கள் கைது

Get real time updates directly on you device, subscribe now.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் மேலும் 6 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் தந்தை ஜெயராஸ்,மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் கோவில்பட்டி சிறையில் இறந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை கொலை வழக்காக பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் , எஸ்.ஐ ரகுகனேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு தொடர்பாக, போலீசார் ரேவதி, பியூலா செல்வகுமாரி, பிரான்சிஸ், சிறப்பு எஸ்.ஐ.,பால்துரை ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த சிலர், ஜெயராஜ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு மேலும் சில போலீசாரிடம் விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து அதில் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader