IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் மதுரையில் பாலியல் வழக்கில் கைதான சம்பவம் சினிமா துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களாக அழகு நிலையம் மற்றும் அக்கு பஞ்சர் கிளினிக்களில் பாலியல் சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துள்ளன. இந்நிலையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில் விபச்சார விடுதியில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருந்ததாக நடிகர் சசிக்குமாரின் அண்ணன் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கிளினிக் நடந்தி வந்தவர் மருத்துவர் மோகன்(62). அவர் அக்குபஞ்சர் கிளினிக் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஹேமா தலைமையிலான போலீசார் சோதனையிட்ட போது, அறையில் ஒரு பெண்ணுடன் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் இருந்துள்ளார். அவரை விசாரித்த போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான சசிக்குமாரின் அண்ணன் ஆனந்த குமார் என விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவர் மோகன் வயாக்ரா மாத்திரை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனந்த குமாரை போலீசார் கைது செய்த சம்பவம் சினிமாத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader