IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சசிகலா விடுதலை 2021ல் தானாம்! அதிமுகவில் பரபரப்பு

Get real time updates directly on you device, subscribe now.

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூர் சிறையில் உள்ள நிலையில் அவரது விடுதலை 2021 ஜனவரி 27ல் தான் விடதலை செய்யப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என்பதால், அவரின் விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார்.

இதுகுறித்து பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா வருகின்ற 2021 ஜனவரி 27ம் தேதி ரிலீசாகுவார் என தெரிவித்தது. மேலும் அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என அறிவித்துள்ளது.

மேலும் பரோல் விதியை பயன்படுத்தினால் சசிகலா விடுதலை தேதி மாறுபடவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இவரது ரிலீஸ் தேதி வெளியானதை அடுத்து அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader