IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கர்நாடகா சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

Get real time updates directly on you device, subscribe now.

சொத்கு குவிப்பு வழக்கில் கைதான சசிகலா ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கர்நாடகா சிறைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேலும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி சசிகலா உட்பட 2 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறை விதிகளின் படி, சசிகலா கடந்த ஆண்டே ரிலீசாகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனையடுத்து நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த சசிகலா மனு அளித்திருப்பதாகவும் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில் அளித்தது.

இந்த நிலையில், ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தன்னை பற்றிய விவரங்களை 3ஆம் நபருக்கு வழங்கக் கூடாது என சசிகலா கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். வழக்கில் தொடர்பு இல்லாத 3ஆவது நபர் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்பதால் விவரங்களை அளிக்க கூடாது என சசிகலா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader