IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சசிகலாவிற்கு இப்போதைக்கு விடுதலை கிடையாதாம்..! சிறை அதிகாரி விளக்கம்

0 12

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவிற்கு நன்னடத்தை விதிகளெல்லாம் பொருந்தாது என கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் விளக்கமளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நன்னடத்தை விதிகளின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இன்று பெங்களூரு சிறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த கர்நாடக சிறைத்துறை இயக்குநர் மெக்ரித்திடம் சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளதா ? என நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் கைதானதால் சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. எனவே அவர் தண்டனை காலம் முழுவதும் சிறையில் முடிந்தே பிறகே விடுதலை ஆவார் என இயக்குநர் மெக்ரித் தெரிவித்தார்.

சசிகலா நன்னடத்தை முறையில் விரைவில் விடுதலை ஆவார் என எதிர்பார்த்த அவரது தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். எனவே சசிகலா தண்டனை காலம் 2021 முடியும் வரை சிறையில் இருப்பார் என சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.