IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சசிகலாவை இனி ஒரு போதும் அதிமுகவில் சேர்க்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

0 21

அதிமுக கட்சியிலிருந்து சசிகலாவை ஆட்சியிரும் சரி, கட்சியிலும் இனி ஒருபோதும் சேர்க்கக்கூடாது என ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதே நிலைமை தான் இனி தொடரும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும் மீண்டும் அதிமுக கட்சியில் இணைவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான் முடிவு எடுக்க வேண்டும் என இரு தினங்களுக்கு முன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

இந்நிலையில் இன்று மதுரையில் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரனிடம் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, யார் யாரோ உளறுவதற்கெல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். வேறு கேள்வி கேளுங்கள் என்று பதிலளித்தார்.
சிங்கம் கூண்டிலிருப்பதால் பயம் விட்டுப் போச்சா..? டிடிவி தினகரன்

இந்நிகழ்விற்கு பிறகு சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என தலைமை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் நடிகர்கள் இனி ஆட்சிக்கு வருவது முடியாத காரியம் என்றும் கமல் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் முதல்வராகிவிட முடியாது. நிஜத்திலும் சாதிக்க வேண்டும் என்பதைப் போன்று தெரிவித்தார்.

சீன அதிபருடன் சீன பாதுகாப்பு அதிகாரிகள் வந்தார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் கூறுவது , சிறு குழந்தை தனம் போன்று உள்ளது. எந்த நாட்டின் அதிபர் வெளி நாடு சென்றாலும் , அவர்களுடன் அந்த நாட்டு அதிகாரிகள் வருவது வழக்கமானதுதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.