IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சமுதாய வானொலிக்காக சிறையில் சசிகலா நன்கொடை

0 40

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சசிகலாவிற்கு மட்டும் 2 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகா மாநிலம் உருவான நவம்பர் 1ம்தேதி நன்னடத்தை காரணமாக சசிகலாவிற்கு விடுதலை கிடைக்கும் என்று கூறி ஒரு தகவல் பரவியது. ஆனால் சசிகலாவிற்கு நன்னடத்தை விதியெல்லாம் அவருக்கு பொருந்தாது என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் அவர் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் சமுதாய வானொலி ஒன்று தொடங்கப்படவுள்ளது. இதற்காக சிறையில் உள்ள அனைத்து கைதிகளிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வானொலிக்காக சசிகலாவும் கணிசமான தொகையை நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல் தெரியவருகிறது.