IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிறையில் சசிகலாவின் புதிய ஆடை குறித்து இணையத்தில் வைரல் புகைப்படம்

0 92

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். இந்நிலையில் சசிகலா ரூ.2 லட்சம் கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகளுடன் அனுபவித்து வருவதாகவ குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வருவது போன்று வீடியோக்களும், சிறை அறையில் பாத்திரங்கள் இருப்பது போன்று புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது சிறையில் சசிகலா சுடிதார் அணிந்து நிற்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் சசிகலா சிறையில் இருக்கும் கைதிகளுக்கான ஆடை அணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் வருமான வரி செலுத்தி வருவதால் இந்த ஆடை கட்டுப்பாடுகள் அவருக்கு இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் சசிகலா சுடிதார் அணிந்த மாதிரியான புகைப்படத்தை யார் எடுத்தார்கள் என்ற கேள்விக்கு சிறை அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.