இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்! பிரதமர் மோடி மரியாதை

Get real time updates directly on you device, subscribe now.

வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளினை முன்னிட்டு ஒற்றுமைக்கான சிலையில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை அமைக்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இவர் இரும்பு மனிதர் என்றும் போற்றப்படும். பட்டேலுக்கு குஜராத்தின் கெவாடியா நகரில் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான சிலை என்ற பெயருடன் 182 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.

பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

குஜராத்தின் கெவாடியா நகரில் அமைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையின் காலடியில் பிரதமர் மோடி பால் ஊற்றி, மலர்களை தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

#RashtriyaEktaDiwas #StatueOfUnity #NationalUnityDay.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More