IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

விப்ரோ கன்ஸ்யுமர் கேர் நிறுவனத்தின் சந்தூர் சோப் விளம்பரத் தூதரானார் நடிகர் கார்த்தி!

49

இந்தியாவின் முன்னணி குளியல் சோப் பிராண்டான சந்தூர், பிரபல பன்முகத் திறமை கொண்ட தமிழ் நடிகர் கார்த்தியை தமது புதிய விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கோலிவுட் நடிகர் சந்தூருடன் இணைந்து பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்.


இதுபற்றி விப்ரோ கேர் மற்றும் லைட்டிங்-ன், நுகர்வோர் நலன் தொழில் பிரிவின் தலைவர் அணில் சக் அவர்கள் கூறுகையில், சந்தூரின் விளம்பரத்தின் மூலம் ‘வயதை தவறுதலாக மதிப்பிடுதல்’ என்ற கருத்தை ஒட்டிய புதிய கதையை 30 வினாடிகளில் கூறுகிறோம். எங்களுடைய விளம்பரத்தின் இலக்கு சந்தூரின் நாயகி மற்றும் முக்கிய தகவலான இளமையாக தோற்றமளிக்கும் சருமமும் ஆகும்.


விளம்பரத்தில், இந்த தகவலை கச்சிதமாக கொண்டு சேர்க்க எங்களுக்கு பிரபலங்கள் உதவுகிறார்கள். வயது குறித்து பொதுவாக ஏற்படும் குழப்பத்தை உடைத்து பிராண்ட்டை நினைவூட்டவும் வகையில் இது அமைகிறது. சந்தூரின் இந்த சாம்ராம்சத்தை மனதில் கொண்டு, வருண் தவான், மகேஷ் பாபு மற்றும் கார்த்தி ஆகியோர் “சந்தூர் பெண்” விளம்பரத்திருக்கு புதிய கதையை முன்னெடுத்து கூறுவார்கள், என்றார்.



இந்த பிராண்ட் உடன் இணைந்தது குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், 35 வருடத்திற்கும் மேலாக மக்கள் மத்தியில் சந்தூர் சோப் ஒரு வலுவான பிணைப்பை கொண்டுள்ளது. அது ஒழுங்கு மற்றும் அக்கறை ஆகிய தகவலை இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சந்தூருடன் இணைவது நிறைய மரியாதையை பெற்றுத் தருகிறது. இந்த விளம்பரத்தில் பங்குவகிப்பதும், இந்த சிந்தனையை வெளியில் கொண்டுவர உதவியாக இருப்பதும் உற்சாகமளிப்பதாக உள்ளது, என்றார்.