IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சஞ்சீவிகிரி எனும் சதுரகிரி மலைப்பயணம்

157

சதுரகிரிமலை மதுரையில் இருந்து கிருஷ்ணன்கோவில் வழியாக வத்திராப் சென்று அங்கிருந்து 10 கிமீ தூரம் சென்றால் தானிப்பாறையை அடையலாம். இதுவே சதுரகிரிமலையின் நுழைவாயிலாகும். இங்கிருந்து 2500 அடி உயரத்தில் நான்கு புறங்களாலும் மலைகளால் சூழப்பட்டு வட்டமான பள்ளதாக்கினது நடுவில் சுந்தரலிங்கம், சந்தனலிங்கம், மகாலிங்கம் என்று மூன்று திருமேனிகளும் பிரதிஷ்டைச் செய்துப் பூஜை செய்து வருகின்றனர்.இவ்விடமே சதுரகிரியின் மையப் பகுதியாகும்.

சதுரகிரி எனும் மூலிகைவனம் தென்தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் சிவகிரி, விஷ்ணுகிரி ,பிரம்மகிரி,சித்தகிரி எனும் நான்கு மலைகளுக்கு நடுவில் சஞ்சீவிகிரி எனும் சதுரகிரி அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைப்பகுதி சுற்றிலும் மூலிகை வளங்களால் அமையப்பெற்றுள்ளது.

நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு உள்ள இந்த மலைப்பகுதியில் அருள்மிகு சுந்தரமகாலிங்கம் மற்றும் அருள்மிகு சந்தனமாகலிங்கம் திருக்கோயில் அமைந்துள்ளது . தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது . அமாவாசை பௌர்ணமி நாட்களில் சிவனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் . மற்ற நாட்களில் மலை ஏற அனுமதி இல்லை .

இந்த சதுரகிரி மலைக்கு கைலாசகிரி, இந்திரகிரி, சந்திரகிரி, சூரியகிரி, பிரம்மகிரி, குபேரகிரி, சித்தகிரி,ஏமகிரி,சிவகிரி,சக்திகிரி,உதையகிரி,மேருகிரி எனப் பன்னிரண்டு பெயர்களுண்டு.மேலும் இந்த மலையில் இருந்து ” சந்திர தீர்த்தம்,கௌண்டின்ய தீர்த்தம்,ஆகாயகங்கைத் தீர்த்தம்,மஞ்சலாற்றுத் தீர்த்தம்,பிரம்மத் தீர்த்தம்,பொய்கைத் தீர்த்தம்,நாகசுணைத் தீர்த்தம்,குளிரூட்டித் தீர்த்தம் “,எனப் பல புண்ணியத் தீர்த்தங்கள் இங்கே உள்ளன.
ஆனால் அவற்றிலிருந்து ஒரு சில தீர்த்தங்களின் நிலைகளே அறியப்படுகின்றன.எஞ்சியவைகள் பற்றிய தகவல்கள் பொதுவாகவே அறியாநிலையிலேயே உள்ளது.

சிவசித்தர்கள் வாழும் சதுரகிரி மலைப் பயணம்…ஏராளமான ஆச்சர்யங்களை அமானுஷ்யங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள சதுரகிரியில் பல்வேறு சுவாரஷ்யமான தகவல்கள் உள்ளன..இதனை வரும் காலங்களில் தொடர்களாக வெளியிடுவோம்..இது சதுரகிரியை பற்றிய முதல் பயண குறிப்புகள் மட்டுமே….இன்னும் நிறைய உள்ளது. அவற்றை இனிவரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.