IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அட்டகாசமான அம்சங்களுடன் Samsung Galaxy M51 அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

ஜெர்மனியில் சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் இதே ஸ்மார்ட்போன் வரக்கூடும் என்பதால், இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை இங்குக் காணலாம்.

சாம்சங் நிறுவனத்தின் M சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பு உள்ளது. அண்மையில் சாம்சங் M31s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போன் ஜெர்மனியில் அறிமுகமாகியுள்ளது.

இதில் 7,000mAh சக்தி கொண்ட பெரிய பேட்டரி, பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் செப்டமர்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகமாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனின் விலை 30 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனின் விலை:

ஜெர்மனியில் சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் EUR 360 (இந்திய மதிப்பில் சுமார் 31,500 ரூபாய்) என்று இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஜெர்மனியின் சாம்சங் இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி M51 சிறப்பம்சங்கள்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.7 இன்ச்
திரைத்தன்மை: சூப்பர் அமோலேட், ஹோல் பஞ்ச் டிஸ்பிளே
பிராசசர்: ஆக்டாகோர்
ரேம்: 6ஜிபி
மெமரி: 128 ஜிபி
கேமரா: பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன.
செல்ஃபிக்கு 32 மெகா பிக்சலுடன் கூடிய ஸ்நாப்பர் கேமரா உள்ளன
பேட்டரி சக்தி: 7,000mAh .

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader