IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பட்ஜெட் விலையில் அட்டகாசமான சாம்சங்கின் ஸ்மார்ட் போன்கள் வெளியீடு

Get real time updates directly on you device, subscribe now.

சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11 ஆகியவை பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் நாளை முதல் இந்திய சந்தையில் கிடைக்க உள்ளன. இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எம் 11 மார்ச் மாதம் வியட்நாமில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் விளைவாக, அந்த போனின் விவரங்கள் ஏற்கனவே வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எம் 01-ன் விவரங்களையும் பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டது.

இந்த இரண்டு போன்களையும் பிரபல ஆன்லைன் இ-வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டில் பெறலாம். இந்த போன்களின் டீசர்களை ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்ததது. ஜுன் 2 நாளை நண்பகல் 12 மணி முதல் இந்த போன் விற்பனை தொடங்கும் என தெரிய வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11

பிளிப்கார்ட் வெளியிட்ட டீசரில் இந்த இரண்டு போன்களின் விலை விவரத்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்கள் படி, சாம்சங் கேலக்ஸி எம் 01-ன் விலை ரூ.8,999-ல் தொடங்குகிறது. அடிப்படை வேரியண்டில் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும். மறுபுறம், சாம்சங் கேலக்ஸி எம் 11-ன் விலை ரூ.10,999-ல் தொடங்கலாம். இந்த போனின் அடிப்படை வேரியண்டிலும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 11 விவரங்கள்:

டூயல்-சிம் Samsung Galaxy M11, 6.4 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் இருக்கலாம். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் சாம்சங் சிப்செட்டை பெயரிடவில்லை. இந்த போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.

கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. இந்த போனில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி, வைஃபை 802.11, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ மற்றும் கலிலியோ உள்ளன. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி M01 விவரங்கள்:

Samsung Galaxy M01, 5.71 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் இருக்கும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும்.

தொலைபேசியின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புறத்தில் ஒரு கேமரா இருக்கும். 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த போனில் 5W சார்ஜிங் இருக்கும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader