IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சாம்சங்கின் புத்தம் புதிய ஃபோல்ட் டைப் மொபைல் போன் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

சாம்சங்கன் புத்தம் புதிய ஃபோல்டு டைப் மொபைல் போன் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல் சீனாவின் 3சி சர்டிபிகேஷன் இணைய தளத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 மொபைலின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம். இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கேலக்ஸி ஃபோல்டு மொபைலின் அடுத்தகட்ட மொபைல் ஆகும்.

இதனை புத்தகத்தைப் போல திறந்து மூடலாம். மிகப்பெரிய டிஸ்ப்ளேவை இந்த மொபைல் கொண்டுள்ளது. குறிப்பாக சினிமா பிரியர்களுக்கு இந்த மொபைல் நல்ல வரப்பிரசாதமாக அமையும்.

5ஜி கனெக்ட்டிவிட்டிக்கும், 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. ஆகஸ்ட் 3-ம்தேதி மொபைல் சந்தைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.

7.59 இன்ச் அளவுள்ள பெரிய டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரீஃப்ரஷ் ரேட், 3 கேமராக்கள், 64 மெகா பிக்சல், 16 மெகா பிக்சல் சென்சார் உள்ளிட்டவை சூப்பரான புகைப்படங்களை எடுக்க உதவும். விலையைப் பொருத்தளவில் இந்திய மதிப்பில் ரூ. 1,44,000க்கு இந்த மொபைல் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader