உலகப்புகழ் பெற்ற சாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ காலமானார்

Get real time updates directly on you device, subscribe now.

உலகப்புகழ் பெற்ற மின்னனு சாதனங்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழும் சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ 25-10-2020 காலமானார். அவருக்கு வயது 78.

கடந்த 2014ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் சாதாரண டிவி நிறுவனமாக இருந்த சாம்சங் நிறுவனத்தை லீ குன் ஹீ தனது தந்தையிடம் இருந்து பெற்று இன்று உலகின் மிகப்பெரிய மின்னனு சாதனங்கள் உற்பத்தியில் முன்னோடி பெற்ற நிறுவனமாக மாற்றியுள்ளார்.

டிவியில் தொடங்கி ஸ்மார்ட்போன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, ஸ்மார்ட் டிவி, மெமரி சிப் என எண்ணற்ற மின்னனு சாதனங்கள் உற்பத்தியில் முன்னோடி நிறுவனமாக மாற்றி உலக அளவில் மாபெரும் பிராண்டாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சாம்சங் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ இன்று அக்டோபர் 25-ம் தேதி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள், அவரின் மகன் உறுதி செய்தனர். லீ குன் நினைவுகளை சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் பகிர்ந்து அவரின் பயணத்தை நினைவு கூர்கிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader