IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரம்

59

இராமநாதபுரம், டிசம்பர்.11 – மழை ஓய்ந்ததால் வெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுர மாவட்டத்தில் மீன்பிடித்தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பள தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, உப்பூர், திருப்பாலைக்குடி, பனைக்குளம், நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட பல ஊர்களிலும் உப்பளத் தொழில் நடைபெற்று வருகிறது.

வாலிநோக்கத்தில் அரசு மற்றும் தனியார் உப்பளங்கள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் வெளி மாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மழை நின்றுள்ளதால் வாலிநோக்கம் பகுதியிலிருந்து கல் உப்பு, மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களுக்கும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களுக்கும் லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.