IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தந்தை கண்ணெதிரே மகளுக்கு பாலியல் தொல்லை – கொதித்தெழுந்த ஊர் மக்கள்

33


தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை போலீசார் வசம் ஒப்படைத்தனர்.


சேலம் மாவட்டம் ராமி ரெட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சரண்யாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.


அப்போது கோவிந்தன் இருசக்கர வாகனத்திற்கு பின்னால் சென்ற தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சக்திவேல் இருவரும் தந்தை கண்முன்னே மகள் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். துப்பட்டாவை இழுத்தும் சரண்யாவின் ஜடையை இழுத்தும் பாலியல் சீண்டலில் இளைஞர்கள் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.


இளைஞர்களின் அத்துமீறலை சுதாரித்து கொண்ட கோவிந்தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். உடனே அதைக்கண்ட ஊர்மக்கள் ஒன்று கூடி இளைஞர்களை சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இருசக்க வாகனத்தில் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

#SexAbuseGirl #Salem #In4Net