IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இதையும் விட்டு வைக்கலையா..! அமெரிக்காவில் அமோக விற்பனை

113


முன்னொரு காலங்களில் பசுமாடு இல்லாத வீடுகளே இருக்காது. அதனால் பசுவின் முக்கியத்துவம் அனைத்தும் அனைவரும் அறிந்திருப்போம். தற்போது விவசாயம் அழிந்துவரும் சூழ்நிலையில் மாடுகள் வளர்த்து வரும் வீடுகள் பெருமளவில் குறைந்து வருகின்றன.

நீண்டகாலமாக வீடுகளில் சமையல் செய்யும் விறகுடன் மாட்டு சாணத்தை உலர வைத்து தயாரிக்கப்படும் வரட்டியை சமையல் எரிபொருளாக பயன்படுத்தி வந்தனர். மாட்டு சாணத்தை தண்ணீரில் கலந்து வீட்டு வாசல் தெழிப்பதற்கும் பயன்படுத்தினர். ஆனால் தற்போது கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. உடல்களை மயானத்தில் எரியூட்ட மட்டும் இந்துக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் மாட்டு சாணம் மூலம் தயாராகும் வரட்டி விற்பனைக்கு வந்துள்ளது. அந்நாட்டின் நியூஜெர்சி நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் அழகாக பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த பேக்கில் இது மத சடங்குகளுக்காக மட்டும், உண்பதற்கு அல்ல என்ற எச்சரிக்கை வாசகத்துடன் விற்பனையாகிறது. 10 வரட்டி கொண்ட பாக்கெட், 2.99 டாலருக்கு விற்பனையாகிறது. (இந்திய ரூபாய் மதிப்பில் 215)

இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறதா அல்லது அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை.