IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மகனுக்கு ஹேர் கட் செய்துவிடும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் பிரபலங்கள் அனைவரும் வித்தியாசமான மற்றும் ரசிக்கக் கூடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுனுக்கு ஹேர் கட் செய்துவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும், அவர்களுடன் ஜிம்மில் பயிற்சி செய்வதாக இருந்தாலும், அல்லது தலை முடியை வெட்டிவிடுவதாக இருந்தாலும் சரி. “ஒரு தந்தையாக அனைத்துமே செய்ய வேண்டும். ஹேர்கட் உன்னை மேலும் அழகாக மாற்றும் அர்ஜுன் என சச்சின் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள சச்சின் தனக்குத் தானே ஹேர் ஸ்டைலிஸ்டாக மாறியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் வெளியிட்டிருந்த பதிவில், “ஸ்குயர் கட் விளையாடுவது முதல் எனது ஹேட் கட் செய்வது முதல் அனைத்தையும் ரசித்து செய்கிறேன். எனது புது லுக் எப்பது உள்ளது குறிப்பிட்டிருந்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader