IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சச்சினுக்கு ஹால் ஆப் பேம் விருது வழங்கி ஐசிசி கவுரவம்

11


கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர்களுக்கு அங்கிகாரம் வழங்கும்வகையில் சர்வதே கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பிலான ஹால் ஆப் பேம் பட்டியலில் சேர்க்கப்படுவர். இந்தப் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்படும் இந்த விருதானது , வீரர்களுக்கு இது மிகப்பெரிய கவுரமாகும்.

உலக அரங்கில் மாஸ்டர் பிளாஸ்டர் , கிரிக்கெட் கடவுள் , சாதனை நாயகன் என் ஒவ்வொரு ரசிகனாலும் அழைக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கி , 24 ஆண்டுகள் விளையாண்டு டெஸ்ட் அரங்கில் 51 சதம் (15321 ரன் ), ஒருநாள் அரங்கில் 49 சதம் (18,426 ரன்) என சதங்களில் சதம் அடித்து சாதனை படைத்த ஒரே வீரர் சச்சின் மட்டுமு.


சச்சின் டெண்டுல்கருக்கு பிரேம் செய்யப்பட்ட தொப்பி , ஐசிசி சார்பில் வழங்கப்பட்டது. இந்த விருது பிஷன் சிங் பேடி, கபில் தேவ் , கவாஸ்கர் , கும்பிளே , டிராவிட் ஆகிய வீரர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டு ஆறாவது இந்திய வீரராக சச்சினுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த கவுரவம் பெரும்பாலும் இங்கிலாந்து (28பேர்) , ஆஸ்திரேலியா (25), வெஸ்ட் விண்டீஸ் (18) ஆகிய நட்சத்திரங்களுக்குத்தான் அதிகமாக கிடைக்கும். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் , ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேத்தரின் பிட்ஜ்பாட்ரிக் ஆகியோருக்கு ஹால் ஆப் பேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.